பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

v

பற்றி வேறுபட்டகொள்கைகள் சில உண்டு);உணவு: வழிப்பறி, கொள்ளே இவற்ருல் பெற்ற பொருள்கள்; விலங்கு: வலிமை யிழந்த யானே, புலி, செந்நாய் முதலியன; மரம்: இருப்பை, ஒமை, உழிஞை,ஞெமை முதலியன பறவை: கழுகு, பருந்து, புரு முதலியன; பறவை: கொள்ளையடிப்போரும், மாடு பிடிப் போரும் அடிக்கும் பறை; தொழில்:வழிப்பறி,கொள்ளையிடுதல்; யாழ்: பாலே யாழ்; பூ: மரா, குரா, பாதிரி; நீர் வற்றின கிண றும், சுனேயும்; ஊர்: பறந்தலே.

முல்லைக்கு நிலம் காடும் காட்டைச்சார்ந்த இடமும்; பெரும் பொழுது: கார்காலம்; சிறுபொழுது: மாலை; கருப்பொருள்தெய்வம்: திருமால்; உணவு: வரகு, சாமை, பிற புன்செய்த் தானியம்; விலங்கு: மான், முயல் முதலியன; மரம் கொன்றை, குருந்து, காயா முதலியன; பறவை: காட்டுக்கோழி,சிவல் முத லியன; பறை ஏறுகோட்பறை: தொழில்: மாடு மேய்த்தல், வரகு முதலியன விதைத்தல் முதலியன; யாழ். முல்லே யாழ்; பூ முல்லே, பிடா, தளவு, தோன்றி, நீர் காட்டாறு; ஊர்: பாடி, சேரி, பள்ளி.

மருதத்துக்கு நிலம் வயலும் வயலைச் சார்ந்த இடமும்; பெரும் பொழுது: கார், இளவேனில், முதுவேனில்; சிறு பொழுது: வைகறை, விடியற்காலம்; கருப்பொருள்-தெய்வம்: இந்திரன்; உணவு: செந்நெல்,வெண்ணெல்; விலங்கு: எருமை: நீர்நாய்; மரம்: மருதம், வஞ்சி, காஞ்சி முதலியன; பறவை: தாரா, நீர்க்கோழி முதலியன; பறை மண முழவு, கினே; தொழில்: நெல் வேளாண்மை; யாழ் மருதயாழ்; பூ: தாமரை, கழுநீர்; நீர் ஆற்றுநீர், பொய்கை நீர் முதலியன; ஊர்: ஊர் என வழங்குபவை. -

நெய்தலுக்குநிலம் கடலும் கடலேச்சார்ந்த இடமும்; பெரும் பொழுது: கார், இளவேனில், முதுவேனில்; சிறுபொழுது; எற்பாடு; கருப்பொருள்-தெய்வம்: வருணன்; உணவு மீனே யும் உப்பையும் விற்றுப்பெற்ற தானியங்கள்; விலங்கு: எருது; மரம்: புன்னே, ஞாழல் முதலியன; பறவை: அன்னம், அன்றில் முதலியன; பறை: மீனைப் பிடிக்கும்போது அடிக்கும் பறை; தொழில்: மீன் பிடித்தல், உப்பு விளைத்தல், அவற்றை விற்றல்