பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

wi

முதலியன, யாழ். நெய்தல் யாழ், பூ தாழம் பூ, நெய்தல் முத லியன ; நீர் மணற் கிணறு, உப்புக் கிணறு, ஊர்: பட்டினம், பாக்கம்,

உரிப்பொருள்: குறிஞ்சிக்குப் புணர்தலும் அவற்ருேடு சார்ந்தனவும்; பாலைக்குப் பிரிதலும் பிரிதல் நிமித்தமும்; முல் இலக்கு இருத்தலும் இருத்தல் நிமித் தமும் (தலைவன் பிரிந்து மீண்டு வரும் வரை அவன்வருவான் என்ற நம்பிக்கையோடு தலைவி வீட்டில் இருத்தல்); மருதம்: ஊடலும் ஊடல் நிமித்த மும்; நெய்தல்: இரங்குதலும் அதன் நிமித்தமும்.

உரிப்பொருளாகிய நிகழ்ச்சி இன்ன நிலத்தில் இன்ன போதில் இன்ன பொருள்கள் சூழ்நிலையாக அமைய நிகழ்வது என்று கவிஞர்கள் பாடும்போது இந்த மூவகைப் பொருள் களேயும் காணலாம். இந்தப்பொருள்கள் யாவும் வரவேண்டும் என்ற வரையறையில்லே. இவற்றில் சிலவும் பலவும் வரலாம். ஆளுல் உரிப்பொருள் அவசியம் வரவேண்டும். அது இல்லா விட்டால் அகத்துறையே இல்லை. திருக்குறள்காமத்துப்பாலில் இப்பொருள்களில் உரிப்பொருள் மாத்திரம் வந்த பாடல்கள் பல உண்டு.

குறிஞ்சியாகிய நிலத்தில் குறிஞ்சித் திணையின் உரிப் பொருளாகிய புணர்ச்சி நிகழ்வதாகச் சொல்லுவது கவி மரபு. இப்படியே அந்த அந்தநிலத்திற்குரிய ஒழுக்கத்தை இணேத்துச் சொல்வார்கள். உலகியலில் வேறு இடங்களிலும் காதலனும் காதலியும் ஒன்றுபடுவது உண்டு. இலக்கியத்திலும் அதை யொட்டிப் பிற நிலங்களில் பிற ஒழுக்கங்கள் நிகழ்ந்ததாகச் சிறுபான்மை கூறுவார்கள். ஆலுைம் குறிஞ்சி நிலத்தில் குறிஞ்சிக் கருப்பொருள்களின் சூழலிடையே குறிஞ்சி உரிப் பொருளாகிய புணர்ச்சி நிகழ்வதாகச்சொன்னல் சுவை மிகுதி யாகும். இலக்கியத்தில் சுவைமிகுவதற்காகக் கவிஞர்கள் தம் கற்பனையால் பலமுறைகளே மேற்கொள்வார்கள். அந்த வகை. யில் புணர்தலென்ற நிகழ்ச்சிக்கு இயற்கை வளமும் தனிமை யும் மிக்க குறிஞ்சிநிலத்தை ஏற்றதாக அமைத்தல் ஒன்று. பாட். டுக்குஏற்றபடிசுருதி அமைத்துக்கொள்வதுபோலவும் ஒவியத்