பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

śįį

துக்கு ஏற்ற நிலக்களம் வரைவதுபோலவும் சிலைக்கு ஏற்ற பீடம் பொருத்துவது போலவும் காதல் நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற முதற்பொருளையும் கருப்பொருளையும் வகுத்துக்கொள்வதால் இலக்கியச் சுவை மிகுகின்றது.

பால நிலத்தில் பிரிவு நிகழ்வதாகச் சொல்வது கவி மரபு. பிரிவு அவலச்சுவை அல்லது சோக ரசத்தை உண்டாக்குவது. மருத நிலத்து ஊரிலே பிரிவு நிகழலாம்; குறிஞ்சி நிலமாகிய மலேச்சாரலிலும் பிரிவு நிகழலாம். ஆல்ை எங்கும் வெப்பம் சூழ்ந்து மரங்களெல்லாம் கரிந்து ஓய்ந்த களிறும் வாடிய புலி யும் தடுமாறும் பாலைநிலத்தில் பிரிவு நிகழ்வதாகச் சொன்னல், அவலச்சுவை பின்னும் சிறப்பாக இருக்கும்; சுருதியும் பக்க வாத்தியங்களும் சேர்ந்த பாட்டைப்போல இருக்கும். அதனல் தான் இந்த வரையறைகள் அமைந்தன. இவை கவிதைக்கு அமைந்த வேலி அல்ல; அதன் அழகை மிகுதிப்படுத்தும் அங்கங்கள். .

ஆயினும் மருதத்தில்புணர்ச்சி நிகழ்வதாகச்சொல்வதும், பிற நிலங்களில் வேறு வேறு நிகழ்ச்சிகள் நிகழ்வதாகச்சொல்வ தும் புலவர்களின் செய்யுட்களில் உண்டு. அவை உலகியலைத் தழுவி அமைந்தன. முதல்,கரு, உரி என்ற மூன்றும் இணைந்து அமைந்தவை கற்பனைத்திறன்; இதை நாடக வழக்கு என்று

சொல்வார்கள். - ۔. . یہ ۔ ------

2

தனித் தனிப்பாடல்களின் தொகுப்பாக இல்லாமல், ஐந்து திணைகளுக்கும் உரிய பாடல்களைத் தனியே ஐந்து புலவர்கள் பாடிய நூல்கள் இரண்டு, எட்டுத் தொகையில் உள்ளன. அவை ஐங்குறுநூறு, கலித்தொகை என்பவை. ஐந்து திணைகளாகப் பகுத்து ஒரே ஆசிரியர் பாடிய நூல்கள் பதி னெண் கீழ்க்கணக்கில் இருக்கின்றன. ஐந்திணை ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, திணமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, கைந்நிலை என்ற ஐந்து நூல்களும் அவ்வாறு அமைந்தவை. -

ஐங்குறுநூற்றிலிருந்து எடுத்த பதினுெரு பாடல்களின் விளக்கம் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது. - - --