பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

viii

ஐங்குறுநூறு எட்டுத்தொகைகளில் அகப்பொருள் பற்றிய நூல்களில் ஒன்று. முதலில் பாரதம் பாடிய பெருந்தேவனுர் பாடியகடவுள் வாழ்த்தும்,அப்பால் ஐம்பெரும் புலவர்கள் ஒவ் வொரு திணைக்கும் நூறு நூறு பாடல்களாகப் பாடிய ஐந்நூறு பாடல்களும் உடையது. மூன்றடி முதல் ஆறடி வரையிலும் அமைந்த பாடல்கள் இந்நூலில்இருக்கின்றன. குறிய அளவை யுடைய நூறு பாடல்கள் அடங்கிய ஐந்து பிரிவை உடைய தாக இருப்பதால் இதற்கு ஐங்குறுநூறு என்ற பெயர் வந்தது. இதில் திணைகள் மருதம், நெய்தல், குறிஞ்சி, பாலே, முல்லை என்றவரிசையில்அமைந்திருக்கின்றன. இவை நிலத்தைப்பற்றி வந்த பெயர்கள். அந்த அந்த நிலங்களில் வேறு நிலங்களின் ஒழுக்கமும் வந்திருக்கும். இந்தப் புத்தகத்தில் உள்ள இரண் டாவது பாட்டு மருதம் என்ற பிரிவில் வருவது. அதில் குறிஞ் சியின் உரிப்பொருள் வந்திருக்கிறது. இப்படியே வேறு சில பாடல்களில் இருப்பதைக் காணலாம். இந்த ஐந்து பிரிவுகளில் மருதத்தைப் பாடியவர் ஓரம்போகியார்; நெய்தலேப் பாடியவர் அம்மூவளுர்; குறிஞ்சியைப் பாடியவர் கபிலர்; பாலையைப் பாடியவர் ஓதலாங்தையார்; முல்லையைப் பாடியவர் பேயர்ை. இந்தப் புத்தகத்தில் இந்த ஐவருடைய பாடல்களும் இருக் கின்றன. மருதம்: 2, 3; நெய்தல்: 4, 5, 6, குறிஞ்சி: 7, 8: பாலை 9, 10; முல்லை: 11.

மருதநிலத்துத் தலைவனுகிய ஊரனே இரண்டு பாடல்களி லும் நாம் காண்கிருேம். அவன் ஊரில் தண்டுறையும் மலர்ந்த பொய்கையும் அதன்கண் முகைத்த தாமரையும் காட்சி அளிக் கின்றன. வயல்களில் நெல் வளர்ந்துபூத்து அந்தப் பூ உதிர்ந்து கிடக்கிறது. அங்கே நண்டுகள் வளைகளில் வாழ்கின்றன. அந்தவளே நிறையும்படி நெல்லின் பூ உதிர்கின்றது. நண்டைக் கள்வன் என்றும் வழங்குவார்கள். நண்டினது கண் வேப்பம் ಶ್ಗ மொட்டைப்போல இருக்கிறதென்று புலவர் வருணிக்

(ருா.

நெய்தல் கிலத்துத் தலைவனத்துறைவன் என்றும் கொண் கன் என்றும் அறிமுகப்படுத்துகிருர் புலவர். கடற்கரையில் மணல் மேடுகள் இருக்கின்றன. அங்கே புன்னேயும் ஞாழலும்