பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 தாமரைப் பொய்கை

எனக்கென்று ஒரு தனிச் செயல் இல்லை. நான் அவருடைய அன்பைப் பெற்றிருக்க வேண்டும். அது இன்று முழுமையாக எனக்குக் கிடைத்திருக் கிறது. -

தோழி: இப்படியே இருந்தால் போதுமா? திருமணம்

செய்து கொள்ளவே வேண்டாமா? தலைவி. யார் அப்படிச் சொன்னர்கள் திருமணம் செய்துகொள்வது இல்வாழ்வு கடத்துவது ஆகிய வற்றைப் பற்றிக் கவலைப்படவேண்டியவர்.அவரே. நமக்கு அவற்றைப் பற்றி எண்ணுவதற்குத் தகுதி இல்லை; எண்ண வேண்டியதும் இல்லை.

தோழி: அவர் அதைப்பற்றிக் கவலைப்படுபவராகத்

தெரியவில்லையே!

தலைவி: அவர் உள்ளக் கருத்தை அவ்வளவு எளிதிலே - உன்னல் அறிந்துகொள்ள முடியாது. அவர் எப் படி எப்படிச் செய்கிருரோ அப்படி அப்படி அவ ரைப் பின்பற்றி ஒழுகுதல் என் கடமை. இன்று களவிலே வங்து என்னேச் சந்தித்து என் உயிருக்கு மலர்ச்சியைத் தருகிருர். அப்படிச் செய்வதே அவர் திருவுள்ளமானல், அதை ஏற்று கடப்பதே எனக் கும் இன்பம். அவர் மணம் புரிந்து வாழ்வாரானல் அப்போது அவருடைய இல்லக் கிழத்தியாக வாழ் வதே எனக்கும் இன்பம். எப்படி இருந்தாலும் என் அன்பும் இன்பமும் கற்பும் வேறுபாடு அடைவ தில்லை. நான் என்றும் அவரோடு இணேங் தவள். ஊரறிய மனேவியென்று தெரியாவிட்டாலும் என் உளமறிய நான் அவருக்கு மனேவிதானே?