பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரைப் பொய்கை 17

தோழிக்குத் தலைவியின் பேச்சைக் கேட்கக் கேட்க் வியப்பு அதிகமாயிற்று. இவள் சின்னஞ் சிறு பெண் பேசுவ து போலப் பேசவில்லையே! கற்பரசியாக அல் லவா பேசுகிருள்? அறிவிலே தலே சிறந்தவள் போலப் பேசுகிருள். தெய்வத் திருவருளிலே உள்ளத்தைக் கரைத்துவிட்ட மெய்ஞ்ஞானியர்கள் கன்ருனலும் அன் ருளுலும் இறைவன் திருவருளென்று சிங்தைச் ச்லன. மற்றுச் சும்மா இருப்பார்கள் என்று சொல்வார்கள். இவள் மனநிலையும் அப்படித்தானே இருக்கிறது? என்று நினைந்து தலைவியை மனத்தால் வணங்கிள்ை.

தலைவியும் தோழியும் நீராடச் சென்ருர்கள். அழ கான பொய்கையில் நீர் கிறைந்திருந்தது. விரிந்த பொய்கை அது. ஒரே சமயத்தில் பலர் வந்து ஆடுவ தற்கு ஏற்றதாக இருப்பது. தாமரை மலர்கள் கால யில் விரிங்து மலர்ந்து மணங்து அழகுடன் கின்றன. இவ்வளவு நாட்களாகஅந்தத் தாமரைப்பொய்கையைத் தோழி பார்த்திருக்கிருள். இன்று அவள் பார்வை அங் தப் பொய்கையில் ஆழ்ந்து பதிந்தது. தன் கண்களே அகல விரித்து அதைப் பார்த்தாள். பொய்கையில் நீர் நிரம்பியிருந்தது. அதனுல் அது பலருக்கும் பயனுடைய தாயிற்று. அதில் ஆம்பல் அல்லி முதலிய மலர்களும் இருந்தன. அவற்ருல் அந்தக் குளத்துக்குச் சிறப்பு உண்டாகவில்லை. அதைத் தாமரைப் பொய்கை என்று ஊரார் வழங்கினர்கள். அப்படிச் சிறப்பாகச் சொல்வதற்கு ஏற்ற தகுதியை அதற்கு உண்டாக்கியது அதில் தோன்றி வளரும் தாமரையே. அது வெறும் பொய்கையாக இராமல் பூம்பொய்கையாக அழகு பெற்று விளங்கியது; மற்றப் பூக்கள் இருந்தாலும் தாம