பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தாமரைப் பொய்கை

தோழி தலைவியின் கிலேயைக் கண்டாள். தலைவி அவ்வாறு ஏங்குவதற்குக் காரணம் அவளுக்குத் தெரிங் ததுதானே? உயிரினும் சிறந்த கற்புக்கு இழுக்கு வரு மென்று தோன்றினுல் உயிரை விட்டுக் கற்பைக் காத்துக் கொள்வது உத்தம மகளிரின் இலக்கணம். கற்பைக் காப்பாற்ற இன்னும் வழியிருக்கிறதா என்று ஆராய்ந்து பார்த்த பிறகுதான் இத்தகைய முடிவுக்கு வரவேண் டும். தாய் தங்தையருக்கு உண்மை தெரியாமையால் இந்த இன்னல் வந்திருக்கிறது. ஆகவே அவர்களுக்கு உண்மையைத் தெரிவிப்பது தன் கடமை என்பதைத் தோழி தெளிந்தாள். அறத்தின் வழியே வாழ்க்கை நிகழ: வேண்டும். மகளிருக்குத் தலைமையான அறம் கற்பு. மக் களுக்குத் தலைமையான அறம் உண்மை. இந்த இரண்டு. அறத்தையும் சிதறவிடாமல் அரண்செய்யத் தோழி' முனைந்தாள். உண்மையைத் தாய் தங்தையருக்கு எடுத் துக் கூறி, தலைவன் மணம் செய்துகொள்ள விரும்புவ: தற்கு உடம்படச் செய்து, தலைவியின் விழைவை நிறை: வேற்றி அவள் கற்பைக் காப்பாற்ற வேண்டும் என்று: உறுதி பூண்டாள். இது அறத்தின் வழி நிற்கும் கிலே, அறத்தொடு நிற்றல்.

உண்மையை எப்படித் தெரிவிப்பது? காதலன் ஒருவன்பால் தலேவி அன்புடையவளாக இருக்கிருள் என்று சொன்னல் போதாது. யாருடைய மணத்தைத் தாய்தந்தையர் மறுத்தார்களோ அந்தத் தலைவனே தலைவியின் காதலன் என்பதைப் புலப்படுத்தவேண்டும். அவன் தங்கள் குலத்துக்கும் செல்வ நிலைக்கும் ஏற்ற வன் என்பதையும் தெரிவிக்க வேண்டும். நேர்முகமாகத்