பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:30 தாமரைப் பொய்கை

-யும் உடம்படச் செய்வது மிக எளிது. தலேவியின் தங்தையார் தம் காதலியின் உரைக்கு மாறு சொல்லும்

இயல்புடையவர் அல்லர்.

இப்படியெல்லாம் யோசித்த தோழி, தன் தாயும், தலைவியை வளர்த்தவளும், கலேவியின் தாய்க்குத் தோழியுமாகிய செவிலிக்கு உண்மையைக் கூறி அறத்

தொடு நிற்க முடிவு செய்தாள்,

. ★ செவிலித்தாய்: இந்தப் பெண் உடம்பு மெலிந்து நிற் கிருளே! என்ன காரணம்? தெரியவில்லையே!

தோழி: நான்கூட அதைக் கவனித்தேன். இவள் எவ்வளவு அழகியாக இருந்தாள்! இவளுடைய பேரழகு குறைந்து வருகிறது போலத் தோன்று

கிறது.

செவிலி: என்ன நோய் வந்திருக்கிறதோ, தெரிய வில்லையே! நன்முக இருந்த பெண் இப்படித் திடீ ரென்று மெலிவை அடைவது ஏன்?

தோழி: எனக்கு இவள் அழகு மங்குவதற்குக் காரணம் தெரியும். ஆனல் அந்தக் காரணத்தால் இவள் இவ்வளவு மெலிவது எனக்குச் சரியாகத் தோன்ற வில்லை.

செவிலி: என்ன காரணம் அது?

தோழி: அன்று சிலர் இங்கே பெண் கேட்க வந்தார்

களே!