பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாமரைப் பொய்கை

போனுராம். நீர்வளம் நிரம்பித் தண்ணென்று இருந்ததாம். அங்கே கண்டுகள் மண்ணேப் பறித்து வளைகளைக் குடைந்திருந்தன. அந்த மண்ணளேகள் மேலாக நோக்குவோருக்குப் புலப் படுவதில்லே. கெற்கதிரில் இன்னும் பால் வைக்க வில்லே. பூத்து அந்தப் பூக்கள் உதிர்ந்திருந்தன. அப்படி உதிர்ந்த பூ கண்டின் வளேகளே மூடியிருந் தன. சிறிது நேரம் நின்று பார்த்தால் அந்தப் பூவின் குவியலிலிருந்து கண்டுகள் மொலு மொலு வென்று வெளி வருவதைக் காணலாம். அந்த கண்டுகளின் கண்ணேப் பற்றிக்கூட அவர் சொன் ர்ை. வேப்பம் பூ மலர்வதற்கு முன் அரும்பாக இருக்குமே, அந்த அரும்பைப் போல அவற்றின் நீண்ட கண் தோன்றுமாம். வேப்பு கனேயன்ன

நெடுங்கண்ணையுடைய கண்டுகளின் தண்ணிய

அகத்தையுடைய மண் அளே நிறைய கெல்லின் பூ உதிரும் ஊரையுடையவன் அந்தச் செல்வன். அவர் சொன்னதைக் கேட்டபோது அந்தச் செல்வன் நெல்லால் குறைவில்லாதவன் என்று தெரிந்து கொண்டேன். அவனே நினைந்து நினைந்து இவள் தன் கவினை இழந்து வருகிருள். இப்படி யும் ஒருத்தி உண்டோ? எதற்காக இவ்வாறு இருக் கிருளோ தெரியவில்லை.

தோழி எதற்காகத் தலைவி மெலிவடைகிருள்

என்று சொன்னலும், மறுபடியும் சாதுரியமாக, "எதற் காக இப்படிக் கவினே இழக்கிருளோ? என்று கேட் கிருள். "இது என்ன பைத்தியக்காரத்தனம்' என்று தொனிக்கும்படி, "எவன்கொல் அன்னுய்?’ என்கிருள்.