பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெல்லுடைய செல்வன் 33

அவள் கேள்வி கேட்பது போலப் பேசிலுைம்

செவிலித் தாய்க்கு உண்மையைத் தெரிவித்துவிட்

டாள். அதன் பயன் தலைவனைத் தாய் தங்தையர் ஏற்

卒f、

றுக் கொண்டு தலைவியை அவனுக்கு மனம் செய்விப் பதுதான்.

தோழி கூற்று வருமாறு:

வேப்புகனை அன்ன நெடுங்கட் கள்வன் தண்அக மண்அளை நிறைய நெல்லின் - இரும்பூ உறைக்கும் ஊரற்குஇவள் பெருங்கவின் இழப்பது எவன்கொல் அன்னய்?

8 அன்னேயே, வேம்பினது அரும்பைப் போன்ற நீண்ட கண்களையுடைய நண்டினது குளிர்ந்த உள்ளிடத்தையுடைய மண்வளை நிறையும்படி நெல்லின் பெரிய பூ உதிரும் ஊரை யுடைய தலைவனுக்காக இவள் தன் பெரிய அழகை இழப்பது என்ன பேதைமை! -

நனே-அரும்பு. கள்வன்-நண்டு. அளே-வளே. இரும்பூபெரிய பூ; செல்வப் பெருமைக்குக் காரணமாதலின் இரும்பூ என்ருள். உறைக்கும். உதிரும், ஊரன்-மருதநிலத் தலைவன். கவின்-அழகு. எவன்கொல்-ஏன், இ

துறை, வரைவு எதிர்கொள்ளார் தமர் அவண் மறுப்புழித் தோழி செவிலிக்கு அறத்தொடு கின் நிறது.

(வரைவு-தலைவனது மணத்தை. எதிர் கொள்ளார்-ஏற் றுக் கொள்ளாராகி. தமர்-தலைவியின் சுற்றத்தார். அவண்தலைவியின் வீட்டில்.)