பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்படியும் உண்டோ ? *37

ஆனுல் வேறு ஒருவனே ஏற்றுக்கொண்டால் அது நிகழலாமா? நிகழும்படி விடலாமா? நிகழ்ந்தால் தலைவி யின் கற்பு என்னுவது? தன் ஆருயிர்க் காதலனேயன்றித் தெய்வம் வேறில்லையென்றும், உயிர் வேறில்லையென் றும், அவனின்றி வாழ்வே இல்லையென்றும் இருப்பவள் தலைவி. நொதுமலர் வரையும்படி அவள் விட்டுவிடு வாளா? அவள் இருக்கட்டும்; அவளுடைய உள்ளம் போலப் பழகும் தோழி விட்டுவிடுவாளா? நடப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாளா? தோழியின் துணையைப் பெற்றே அவ்விருவரும் அடிக்கடி சந்தித் தார்கள். அவர்களுடைய காதல் படர்வதற்குத் தோழி கொழுகொம்பாக கின்ருள். அவள் எல்லாம் அறிந்தும், நொதுமலர் வரைவதைப் பார்த்துக் கொண்டிருப்பாளா ?

‘எப்படியாவது உண்மையைச் சொல்லித் தலே வனேயே மாப்பிள்ளையாக ஏற்றுக்கொள்ளும்படி செய்யவேண்டும் என்று அவள் தீர்மானித்தாள்.

தன் தாயும் தலைவியின் வளர்ப்புத் தாயுமாகிய செவிலியை அணுகினுள்.

தோழி: அன்னுய்!

செவிலி என்ன அம்மா, சமாசாரம்? உன் தோழிக்குக்

கல்யாணம் வரும்போல் இருக்கிறதே!

தோழி ஆம் நானும் கேள்வியுற்றேன். -്ത്രി. செவிலி: ஆனுல் என்ன?