பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிநிற மால்வரை _ਨ੍ਹਾਂ

உடையவர்கள் அல்லவா? கிழங்கு கன்ருகப் பருக். திருக்குமென்று தெரிந்தால் அவர்கள் உடனே அதைப் பறித்து விடுவார்கள். இதனுல் அந்த இடத்தில் அங்கங்கே குண்டும் குழிகளுமாக இருக்கும். கிழங்கு. எவ்வளவு ஆழமாகச் சென்றிருந்தாலும் விடாமல் அடியோடு அகழ்ந்துவிடுவார்கள். இவ்வாறு கானவர் கிழங்கு அகழ்ந்த நெடுங் குழிகள் பல அங்கே இருக்கும்.

மலேச் சாரலிலே மழை வளத்துக்குக் கேட்க, வேண்டுமா? நல்ல மழை பெய்வதனல் குறிஞ்சி நிலத் துக்குரிய மரங்களாகிய கடம்பு, சந்தனம் முதலியவை வளம் பெற்று ஓங்கியிருக்கும். வேங்கை மரங்கள் கன்ருக வளர்ந்திருக்கும். உரிய காலங்களில் அவை: மலர்ந்து அழகு பெற்று விளங்கும்.

வேங்கை மரம் மலர்ந்தால் குறமகளிருக்குக் கொண்டாட்டம். அந்தப் பருவத்தில் தினேயை அறுத்து விடுவார்கள். தினே விளைந்து வேங்கை மலர் மலரும் காலத்தில் குறிஞ்சி நிலத்து ஊர்களில் எல்லோரும் விழாக் கொண்டாடுவார்கள், மணம் செய்வார்கள். சிறு பெண்கள் வேங்கை மரத்தின்மேல் ஏறி அதன் பூவைப் பறிப்பார்கள். -

வேங்கை மலர் மஞ்சளாகப் பொன்னைப்போல இருக்கும். புதியதாக வேங்கை மரங்கள் பூத்து கிற் கின்றன. அந்த மரங்களின் அடியிலே கவலைக்கொடி படர்ந்திருக்கிறது. சில இடங்களில் கவலைக் கிழங்கைக் கானவர் அகழ்ந்துவிட்டார்கள். அந்தக் கிழங்கை