பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறுங்கை இரும்புலி 71

திலே நின்றுகொண்டு தன் வரவைச் சில ஒலிகளால் புலப்படுத்துகிருன். இரவுக் காலம். மனேக்குப் புறம்பே குறிப்பிட்ட இடம் ஒன்றில் அவர்கள் ஒருவரை ஒருவர் கண்டு அளவளாவுவார்கள். தோழி தலைவியை அழைத்துக்கொண்டு அவ்விடத்தருகே சென்று விட்டுவிட்டு வருவாள்,

இன்றும் அப்படியே தலைவியை அழைத்துச் சென்ருள். தலைவன் மறைவாக, சிறைப்புறமாக சிற்கிருன். அருகே தலைவியுடன் தோழி சென்ருள், தலேவியைத் தனியே விட்டுச் செல்வது வழக்கம். இன்று தன் கருத்தை எப்படியாவது வெளிப்படுத்தி விடவேண்டும் என்று அவள் உறுதி செய்திருக்கிருள். ஆகையால் சிறிது நேரம் தலைவியுடன் அங்கே கின்று அவளிடம் பேசத் தொடங்கிள்ை. அவளோடு பேசி லுைம் அந்தப் பேச்சு மறைவிலே கிற்கும் தலேவன் காதில் விழ வேண்டும் என்பதுதான் அவள் விருப்பம். தோழி : இந்த இரவில் காட்டு வழியில் வருவது

எவ்வள்வோ அச்சத்தைத் தருவது. தலைவி : ஒவ்வொரு நாளும் கான் அதை எண்ணித்

தானே மறுகுகிறேன்? - தோழி : புலிகள் உலாவும் காடுகள் பல, மலேயைச்

சார்ந்த இடங்களில் இருக்கின்றன. தலைவி : அவை உயிரை வெளவும் கொடுமையை

உடையன ஆயிற்றே! தோழி : கம்முடைய தலைவருடைய காட்டில் அத்

தகைய கானகங்கள் பல உண்டு.