பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 தாமரைப் பொய்கை —-

தலைவி புலி உலாவும் காட்டில் வேறு ஏதும் இருக்க

முடியாதே! - தோழி : புலி வெளிப்படையாக உலவுமா? அது - மிகவும் தங்திரமுள்ள விலங்கு. *

தலைவி பின் என்ன செய்யும்?

தோழி அது மறைந்து நின்று தனக்கு ஏற்ற இரைக்

காகக் காத்திருக்கும்.

தலைவி அதற்கு ஏற்ற இரை எது? மனிதனு:

தோழி : புலிக்கு யானைக் குட்டியென்றல் விருப்பம் அதிகம். பசி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கண் எதிர்ப்பட்டதைக் கொன்றுவிடும் இயல் புடையது அது கொலேயிலே வன்மையுடையது. ஒரு விலங்கைப் பிடித்துவிட்டால் தன் முன்னங் காலாலே அறைந்தே கொன்றுவிடும். பின்காலே விட அவை குறுகியவை. ஆகையால் குறுங்கை என்று சொல்வதுண்டு. உடம்பு பெரிதாகத் தான் இருக்கும். குறுங்கை இரும்புலி மரத்தின் நிழலிலே ஒளிந்திருக்கும். பலா மரங்களில் குலே குலேயாகப் பழங்கள் தொங்கும். அந்த மரத்தின் வளப்பமான நிழலில்தான் புலி ஒளிந்திருக்கும். பலாக் காயும் பழமும் இலையும் அடர்ந்த அங்கே அது ஒளிந்திருப்பது கண்ணுக்குத் தெரியாது. பலாவின் பழம் தொங்கும் கொழு கிழலில் குறுங்கை இரும்புலி ஒளிந்திருப்பது எதற்காகத் தெரியுமா? அங்தப் பழத்தை அது உண்ணுமா என்ன? காட்டில் எங்கும் செடிகள் அடர்ந்த