பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாலை குளிர்ந்தது

எங்கே பார்த்தாலும் ஒரே வெப்பம். ஒரு காலத் தில் காடு இருந்த இடம், இப்போது எல்லாம் வாடிப் பசுமையற்றுப் பாலே நிலம் ஆகிவிட்டது. அதோ ஒர் யானே தட்டுத் தடுமாறி நடக்கிறது. அட! என்ன இது? யானே என்ருல் எவ்வளவு கம்பீரமாக அசைந்து அசைந்து கடக்கும்! தன் துதிக்கையை முன்னும் ன்னும் ஆட்டி நிலத்திலே புரட்டுமே! மண்ணேத் துதிக்கையால் அள்ளி அள்ளி மேலே வீசிக்கொள் ளுமே! யானே தன் தலையில் தானே மண்ணே வாரிப் போட்டுக் கொள்வதுபோல என்று பழமொழி வழங்கு. கிறது, அந்தப் பழமொழி இந்த யானைக்குப் பொருத்த மில்லே போலிருக்கிறது. துதிக்கையை மிகவும் ஜாக்கிர தையாகத் துாக்கியபடியே கடக்கிறது இது.

பொறிகளையும் வரிகளையும் உடைய வளைந்த

துதிக்கை அது, அதை நீட்டிவிட்டால் தரையிலே புரளும். ஆனல் அது அவ்வாறு செய்யாமல் சுருக்கிக் கொண்டு நடக்கிறது. துதிக்கை நிலத்திலே பட்டால் வெங்துவிடுமே! அதனுடைய முரட்டு அடிக்குக் கூட இந்தப் பாலைவனத்தின் வெம்மை உறைக்கிறது.

அப்படி இருக்க மிகவும் நுட்பமான நுனியை உடைய துதிக்கை அந்த வெப்பத்தைத் தாங்குமா? பொறிவரித்