பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*78 தாமரைப் பொய்கை

தடக்கை வேகுமென்று அஞ்சி அந்தத் துதிக்கையால் நிலத்தைத் தொட்டு கடக்கவில்லே. மனிதருடைய கண்ணே இங்குள்ள வெம்மையால், விரியாமல் சுருங்கிக் கூசுகிறது. யானைக்குக் கண் சிறியது. அதன் கண் கூசுவதற்குக் கேட்பானேன்? அது மெல்ல மெல்ல கடக்கிறது; ஒய்ந்து போய் நிற்கிறது. அவ் வளவு கடுமையான வெப்பம் செறிந்த சுரம் இது.

முன்பு, மரங்கள் அடர்ந்த சோலேகள் இங்கே கன்ருக வளர்ந்து வளம் பெற்றிருக்கவேண்டும். எங்கே பார்த்தாலும் கரிந்து போன மரங்களும் மொட்டை மரங்களுமாக இருக்கின்றன. வெயிலால் எல்லாம் வற்றி உலர்ந்து வாடித் தீய்ந்து போயின. மூங்கில்கள் மாத்திரம் ஓங்கி நிற்கின்றன. வெயிலால் முளிந்த (உலர்ந்த) சோலேயை உடையன. இந்தப் பாலே நிலத்தில் உள்ள இடங்கள், வேய் (மூங்கில்) உயர்ந்த சுரம் இது.

இத்தகைய பாஃப் கிலத்தின் வழியே அவன் வருகி ருண். தன் இல்லக்கிழத்தியை விட்டுப் பிரிந்து பொருள் தேடும்பொருட்டு வருகிருன். விரைவிலே பொருளைத் தேடிப் பெற்று மீளவேண்டும் என்ற ஊக் கத்தோடு அவன் வந்துகொண்டிருக்கிருன். பொருள் கிரம்பப்பெற்று மீண்டு தன் ஊர் சென்ருல் முன்னேயி னும் பல மடங்கு வசதிகளைப் பெற்று இன்புறலாம் என்று எண்ணினன். . -

அவன் தலைவியைப் பிரிந்து வந்தாலும் அவன் கிண்வு முழுவதும் அவளிடமே இருக்கிறது. அவளு ட்ைய எழில் அவன் அகக்கண்ணினூடே நிற்கிறது.