பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடைத்தெழு வெள்ளம் அவன் பொருள் ஈட்டுவதற்காகச் செல்ல எண் ணினன். தன் கருத்தைத் தோழியின் வாயிலாகத் தலேவிக்குத் தெரிவித்தான், தலைவிக்ருப் பொருள் அவசியமென்பது கன்ருகத் தெரியும். ஆடவர் பொரு ளிட்டும் கடமையை உடையவர் என்பதையும் அறிவாள். ஆயினும் தன் காதலனேப் பிரிந்திருப்ப தற்கு அவளால் முடியாதென்று தோற்றியது. .

அவள்பால் வஞ்சகம் இல்லே. அவளுடைய அன்பு அவ்வளவு செறிந்தது; ஆழ்ந்தது. காதலன் பிரியப் போகிருன் என்று தெரிந்தது முதல் அவள் உடம்பில்ே வாட்டம் உண்டாயிற்று. உணவு இறங்கவில்லை. ஒன்றைச் செய்யப்போல்ை மற்ருென்றைச் செய் கிருள். அடிக்கடி பெருமூச்சு விடுகிருள். அடக்கி அடக்கிப் பார்த்தாலும் கண்ணிலே நீர் ததும்புகிறது. இந்த கிலேயைத் தலைவன் கவனித்தான். அவளைப் பிரிவது பாவம் என்றே தோற்றியது. ஆயினும் பொருளின்றி இவ்வுலகமே இல்லையே! இல்வாழ் வானுக்கு அறமும் இன்பமும் நிரம்ப வேண்டுமானுல் பொருள் நிறைய வேண்டுமல்லவா? அவனுக்குப் பொருளே ஈட்டும் திறம் கன்ருக இருக்கிறது. வேற்று நாட்டுக்குச் செள்று பொருளைத் தேடவேண்டும். அது வரையில் அவன் காதலி அவனேப் பிரிந்து வாழ்க்

திருப்பது அரிது. - தாமரை-7