பக்கம்:தாயுமானவர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 82 & தாயுமானவர் 'அருள்பழுத்த பழச்சுவையே கரும்பே தேனே ஆரமுதே' - ஆகாரபுவனம் - 7 'தேன்ஆகிப் பாலாகிக் கனியாய்க் கன்னல் செழும்பாகாய்க் கற்கண்டாய்த் திகழ்ந்த ஒன்றே" - பன்மாலை - 5 'கரும்போ தேனே முக்கனியோ என்ன என்.உள் கலந்து நலம் தரும்பேர் இன்பப் பொருளே’ - என்னை ஒருவர் - 3 என்ற இடங்களில் இத்தகைய உருவகங்களைக் காணலாம். (எ) இறைவனோடு அத்துவிதக் கலப்பினால் ஆனந்தம் உண்டாதல், "அத்துவித ஆனந்த சித்தம் உண்டாம்” - நினைவு ஒன்று - 7 'அத்துவித அநுபவத்தை' - மண்டலத்தின் 7 என்பவற்றில் இதனைக் காணலாம். (ஏ) சிவசக்தியின் பெருமை செப்புதல்: 'ஆனந்த ரூபமயிலே' - மலைவளர் காதலி - 5 இங்கு 'ஆனந்தம் சிவசக்தி என்பதாயிற்று. மலைவளர் காத லி' என்னும் பதிகத்தில் உமையம்மையின் பெருமையை அடிகள் அழகுறப் பகர்ந்துள்ளனர். இறைவனின் திருக்கோ லத்தை, 'கொண்டாடி னர்.முனம் கூத்து ஆடும் அத்தன்தன் கோலமெல்லாம் விண்டால்.அம் மாஒன்றும் காணாது வெட்ட வெளியே' - பாயப்புலி - 5 என்று கூறியவிடத்து 'வெட்டவெளி' என்று புகன்றது போல, இறைவியைக் கூறுமிடத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/102&oldid=892089" இலிருந்து மீள்விக்கப்பட்டது