பக்கம்:தாயுமானவர்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆 84 令 தாயுமானவர் விளக்கம்: சிவலோகம் எனப்படும் உருத்திரலோகம் அண் டத்தின் முடிவிலுள்ளது. அவ்வுலக முதல்வன் சிவபெருமா னோடு இரண்டறக் கலந்த ஞானமூர்த்தியாய்க் கீழுள்ள அயன், அரி முதலிய எல்லா தேவர்கட்கும் தலைவன். அண்டத்திலே இறைவன் திருவருள் செவ்விதின் விளங்கும் இடம் அஃது ஒன்றே. அண்டத்திற்கு வெளியே பத்துத் திசையிலும் நூறு புவனங்கள் உள்ளன. அவற்றின் ஒவ் வொன்றிலும் ஞானம் பெற்ற ஒவ்வொரு உருத்திரர் தலைவ ராக வீற்றிருப்பர் என்று சிவாகமங்கள் செப்புகின்றன. ஆத லால் அவ்விடங்களில் சிவவிளக்கம் சிறந்திருக்கும். கதிரவன் மண்டலம் அதனைச் சூழ்ந்துள்ள உலகங்கட்கு ஒளி கொடுத்து அவை தத்தம் நிலையில் இயங்கு வதற்கு ஏதுவாயிருத்தலால் அம்மண்டலத்தின் நடுவே சிவபெரு மானை வழிபடுதல் நமது முன்னோர் வழக்கு. அனல் வளர்த்து அதன் நடுவிலே சிவபெருமானை வழிபடுதல் யாவரும் அறிந்ததே. கதிரவனைச் சிவபெருமானின் இருக்கை யாகவும் சிவத்தின் பகுதியாகவும் தண்மைமிக்க திங்களைச் சத்தியின் பகுதியாகவும் கருதுதல் மரபு. அன்பர்கள் மலர் தூவி இறைவனை வழிபடும் வடிவங்களிலே கடவுள் சிறப் பாக அருள் புரிவார் என்பது பல தோத்திர நூல்களால் அறியப்பெறும். திக்குகள் என்பது வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற நாற்றிசைகளையும், திக்கின் முடிவுகளென்பது வடகி ழக்கு தென்கிழக்கு, தென் மேற்கு, வடமேற்கு என்னும் திசைகளையும் குறிக்கும் எனக் கொண்டு எட்டுத் திக்குப் பாலகர்க் கதிபதியாய், உருத்திரர்கள் உள்ளனர் என்னும் கருத்திற்கிணங்க 'திக்குத் திகந்தத்திலோ இருப்பதென்றார் என்று சொல்லுவதும் உண்டு. பிற பூதங்களுக்கு இடம் கொடுத்து நிற்கும் ஐந்தாம் பூதமாகிய ஆகாசத்திற்குச் சதாசிவ மூர்த்தி தலைவராதலாலும் காணாத அருவினுக்கும் காணும் உருவினுக்கும் நடுவாயுள்ள சதாசிவ வடிவம் சிவாகமங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/104&oldid=892091" இலிருந்து மீள்விக்கப்பட்டது