பக்கம்:தாயுமானவர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. ஆன்மாவின் அருங்குணங்கள் இறைவனைப்பற்றி அடிகள் கூறியவற்றை ஆராய்ந்த தாம் இறைவன் கண்ணுக்குத் தெரியாதவனாகவும் கருத்திற்கு எட்டாதவனாகவும் உள்ளதால் இறை மறுப்புக் கொள்கை யும் பிறவும் தோன்றவும் ஏதுவாயிற்று என்பதையும் நினைக் கின்றேன். ஆனால், பசுவாகிய உயிர் அவ்வாறில்லை. அது கண்ணுக்குப் புலனாகாவிடினும் கருத்திற்குப் புலனாவதாக ஏற்றுக் கொள்ளப் பெறும். 'உயிர் உள்ளது; உயிர் போயிற்று உயிர் வந்தது; உயிர் வாழ்கிறது' என்றாற் போன்ற கூற்றுகளும் இஃது உயிர் உள்ள பொருள்; இஃது உயிர் இல்லாத பொருள்' என்ற பாகுபாட்டுப் பேச்சு வழக்கு களும் உயிர் உண்மை என்ற கருத்துக்குச் சான்றுகள். தாயுமான அடிகள் உயிர் பற்றித் தம்பாடல்களில் குறிப் பிடும் கருத்துகளை ஈண்டுக் காண்போம். (1) உயிரின் குறைகள்: உயிர்கள் பாசத்தால் பிணிக்கப்படு. மாதலின் அவை பல்வேறு குறைகளையுடையவை. அருளா சிரியர்கள் குறைவற்றவர்கள், எல்லாக் குறைகளும் தம்மிடம் இருப்பதாகக் கூறுவர். வைணவத்தில் இதனை நைச்சியாதுசந் தானம் (தன்னைத் தாழ்த்திக் கூறிக் கொள்ளுதல்) என்று குறிப்பிடுவர். தாயுமான அடிகளும் தம்மிடம் எல்லாக் குறை களும் இருப்பனவாகக் குறிப்பிடுவதை அவர்தம் பாடல்க ளில் காணலாம். 'பண்ணேன் உனக்கான பூசைஒரு வடிவிலே பாவித்து இறைஞ்சஆங்கே, பார்க்கின்ற மலருடு நீயே இருத்தி,அப் பனிமலர் எடுக்கமனமும் நண்ணேன், அல்லாமல்இரு கைதான் குவிக்கஎனின் நானும்,என் உளம்நிற்றிரீ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/107&oldid=892094" இலிருந்து மீள்விக்கப்பட்டது