பக்கம்:தாயுமானவர்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவக் குறிப்புகள் 哆 121 令 பிரகிருதிக்கு மேற்பட்ட தத்துவங்களை வித்தியா தத்து வம் ஏழாகவும், சுத்ததத்துவம் ஐந்தாகவும் பகுத்தோதுகின் றார் அடிகள். 'வித்தியா தத்துவங்கள் ஏழும் வெருண்டோடச் சுத்தபர போகத்தைத் துயக்குநாள் எந்நாளோ?” - எந்நாட். தத்துவமுறைமை - 11 "சுத்த வித்தை யேமுதலாத் தோன்றுமோ ரைந்துவகைத் தத்துவத்தை நீக்கியருள் சாருநாள் எந்நாளோ?” - மேலது 13 என்ற கண்ணிகளில் இவற்றைக் காணலாம். வித்தியா தத்துவம் ஏழையும் அசுத்த மாயையினின்றும் அனந்ததேவர் என்னும் வித்தியேசுவரர் செயற்படுத்துவதால் இப்பெயர் பெற்றது. இவை காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயை என்பனவாகும். காலம் என்பது உயிர் நுகர்வதை வரையறைப்படுத்துவது. அவரவர் செய்த வினையை அவரவரே நுகருமாறு வரையறைப்படுத்துவது நியதி தத்துவம். கலை என்னும் தத்துவம் உயிரினிடை ஆணவமல மறைப்பைச் சிறிது நீக்கி அதன் தொழிலாற்றலை விளக்குவது. வித்தை என்ற தத்துவம் மாயையினின்று தோன்றாமல் கலையினின்று தோன்றுவது. அராகம் வித்தை யினின்று தோன்றுவது. ஆன்மாவின் கிரியா சக்தியை விளக்கி அதனைத் தொழிற் படச் செய்வது கலை. வித்தியா தத்துவம் ஆன்மாவின் ஞான சக்தியை எழுப்பும். அராகம் ஆன்மாவின் இச்சா சக்தியை எழுப்பும். இந்நிலையில் ஆன்மா கன்மத்தை நுகரவும் ஈட்ட வும் தகுதி பெற்று நிற்கும். ஆகவே, ஆன்மா கன்மத்தை நுகர்தல், ஈட்டல்கட்குக் காலம், நியதி, கலை, வித்தை, அராகம் என்னும் ஐந்தும் இன்றியமையாதனவாய் ஆன்மா வோடு எப்பொழுதும் நீங்காது சட்டைபோல் ஒன்றாய் ஒட் டியே கிடக்கும். இதனால் இவ்வைந்தும் பஞ்ச கஞ்சுகம் என வழங்கப் பெறும். கஞ்சுகம் - சட்டை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/141&oldid=892133" இலிருந்து மீள்விக்கப்பட்டது