பக்கம்:தாயுமானவர்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

这,122 哆 தாயுமானவர் மேலே தத்துவங்கள் 36 என்று கூறினேன் அல்லவா? உயிர்கட்குச் சுட்டறிவு (பாசஞானம்) விளங்குதற் கேதுவா கிய அதிசூக்குமை, சூக்குமை, பைசந்தி, மத்திமை, வைகரி என்னும் ஐந்து வாக்குகளும் உண்டாவதற்கிடம் இத்தத்து வங்களேயாகும். உயிர்களைப் பிணித்திருக்கும் பலவகைப் பிணிப்புகளில் வாக்குகளே நீக்குவதற்கரிய பெரும் பிணிப்பா கும். இப்பிணிப்பு அறின் ஏனைய பிணிப்புகள் தாமே நீங்கி வீட்டு நிலை கைவரப்பெறும். இந்த ஐந்து வாக்குகளும் சுத்தமாயை என்பதன் பிரிவுகளே. இதே சுத்த மாயையினின் றும் தோன்றும் ஐந்து சிவ தத்துவங்கள் சிவம், சக்தி, சதா சிவம், ஈசுரம், சுத்தவித்தை என்பன. இத்தத்துவங்களின் வழிநின்றே இறைவன் ஐந்தொழில்களையும் (படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல்) இயற்றுவன். சிவதத்துவத்தில் இறைவனுடைய ஞானசக்தி மட்டிலும் விளங்கும். சக்தி தத்துவத்தில் முதல்வனது கிரியா சக்தி விளங்கும். சதாசிவத்தில் இறைவது ஞான சக்தியும், கிரியா சக்தியும் ஒத்து விளங்கும். ஈசுர தத்துவத்தில் இறைவனது கிரியா சக்தி சிறப்பாக மிக்கு விளங்கும். சுத்தவித்தையில் ஞான சக்தி மிக்கு நிற்கும். காரணம் ஞான நூல்கள் மந்திரங்கள் முதலியன வெளிப்படுத்துவதற்கும், கீழ்த்துவங்களிலுள்ள வர்களை இயக்கும் மூர்த்திகட்கு ஞானம் உதிப்பதற்குமாகும். இத்தத்துவங்கள் யாவும் அடிகளின் திருப்பாடல்களில் புல னாகும் அளவு ஒருவாறு விளக்கம் பெற்றன. ஒருநிலையில் அநுபூதி நிலையில் - தத்துவங்களை யெல்லாம் மறந்து அருள்மோன வள்ளலாகிய இறைவனிடம் அன்பு பூனக் கருதுகின்றார்; கரங்கள் அவனிடம் கை கூப்பி எழுவதாகவும், கண்கள் அவனைக் கண்டதுபவிக்கவும் துடிப்பதாகக் கூறுவர். 'தத்துவப்பே யோடே தலையடித்துக் கொள்ளாமல் வைத்த அருள்மோன வள்ளலையே - நித்தம்அன்பு பூனக் கருதும்நெஞ்சு போற்றக் கரம்எழும்பும்; காணத் துடிக்கும்.இரு கண் - உடல் பொய்யுறவு - 29 என்ற பாடலில் இதனைக் கண்டு மகிழலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/142&oldid=892134" இலிருந்து மீள்விக்கப்பட்டது