பக்கம்:தாயுமானவர்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

※ 132 旁 தாயுமானவர் மொழி என்ற கருத்திற்கு அடிமைப்பட்டுத் தற்பெருமை பாராட்டும் இறுமாப்புக்கு மூலகாரணமாக இருப்பது அகங்கா ரம். தன்னுடைய சாதியைப் பற்றியும், குலம் கோத்திரம் பற்றியும், தான் ஆளும் கட்சியில் ஒருவன் என்ற நிலைபற்றி யும் பெருமை பாராட்டிக் கொள்வது மாந்தரது இயல்பு. தான் அல்லாததைத் தான் என்று கருதுவதாலும் தனது அல்லாத வற்றைத் தனது என்று கருதுவதாலும் இத்தகைய செருக்கு கள் உள்ளத்தில் உருவெடுக்கின்றன. இங்ங்னம் உருவெடுக் கும் மனப்பான்மையை மாற்றியமைப்பது எளிதான செய லன்று. இக்கருத்தையும் அடிகள் யாதொன்று தொடினும் அது வாய்த் தாங்காது மொழி பேசும் என்கின்றார். இவை யாவும் அகங்காரத்தின் விளைவுகளாகும். ஒவ்வொரு சீவனும் தான் தான் படைத்துக் கொண்டிருக்கும் அகங்காரத்திற்கு மாறு பட்ட கூற்று எதையும் ஏற்றுக் கொள்வதில்லை. புறம்பான கூற்றைத் தாக்கிப் பேசுவதே அதன் போக்கு ஆகும். இப் போக்கைத்தான் தாங்காது மொழி பேசும் என்று அடிகள் குறிப்பிடுவது. இவ்வுலகில் இயற்கையாக நடைபெறும் அனைத்திற்கும் மும்மூர்த்திகளே காரணர் ஆகின்றனர். ஆக்கல், அளித்தல், அழித்தல் ஆகிய மூன்று செயல்களும் நிகழாவிட்டால் இயற் கையில் ஒழுங்குப்பாடு இராது. இந்த மூவிதச் செயல்களும் இயற்கையில் சிறியவை, பெரியவை ஆகிய அனைத்தின் வாயிலாகவும் நிகழ்ந்து வருகின்றன. ஒரு சிறிய செடி முளைத்து வளர்ந்து பட்டுப்போதலும், புதிய விண்மீன் தோன்றி நிலைத்திருந்து தேய்ந்து மறைதலும் போன்ற செயல் கள் யாவும் இயற்கையின் நியதிகள். மனிதனுடைய முயற்சி யில் இம்மூவிதச் செயல்கள் நடைபெற்று வந்தாலும், பெயர ளவில்தான் அச்செயல்கட்கு மனிதன் கர்த்தா ஆகின்றான். அவன் மூலமாக நடைபெறும் நிகழ்ச்சிகளையெல்லாம் மும் மூர்த்தியின் செயல்கள் என்றோ பரம்பொருளின் செயல் என்றோ கருதுவதே முறை. ஆனால், அகங்காரம் பிடித்திருக் கும் ஒருவன் அப்படிக் கருதான். அனைத்திற்கும் தான்தான் காரணகர்த்தா என்று நினைத்துக் கெள்ளுகின்றான். இவை யெல்லாம் அகங்காரத்தின் விளைவு. இத்தகைய அகங்காரத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/152&oldid=892145" இலிருந்து மீள்விக்கப்பட்டது