பக்கம்:தாயுமானவர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* மனத்தின் இயல்புகள் 哆 133 令 தைக் குறித்துத்தான் அரிகரப் பிரம்மாதி தம்மொடு சமானமென் னும் என்று அடிகள் இயம்புகின்றார். தேர் ஒன்றின் வடிவம் எப்படி வேண்டுமானாலும் அமையலாம். பெரியது, சிறியது, உயர்ந்தது என்றெல்லாம் நாம் விரும்பியவாறு தேவைக்கேற்றவாறு வெவ்வேறு வித மாக மாற்றியமைக்கலாம். சக்கரங்கள் நன்கு சுழன்று வருவ தற்கான பாங்கை நவீன பொறியியல் அறிவைக் கொண்டு சிறப்பாக அமைத்துக் கொள்ளலாம். கண்ணைக் கவரும் அதன் அலங்காரத்தை வெவ்வேறு விதமாக அமைத்துக் கொள்ளலாம். சக்கரங்களின் அமைப்பும் அலங்காரங்களின் அமைப்பும் பல்வேறு திருத்தங்கள் அமைந்து கொண்டிருப்ப தற்கிடையிலும் சக்கரங்களைத் தாங்கியிருக்கும் அச்சாணி ஒருவித மாறுதலும் அடையாதுள்ளது. அசைந்தியங்கும் தேரில் அஃது அசையாதுள்ளது. அந்த அச்சாணிக்கு ஒப்பா னது மனிதனது அகங்காரம். அடிகள் மானிட உடலை ஒரு தேருக்கு ஒப்பிடுகின்றார். பிறக்குங் குழந்தை வடிவத்திலி ருந்து கிழவன் வடிவம் வரையில் உடல் என்னும் தேர் எத்தனையோ விதமான அலங்காரங்களைக் கண்டுள்ளது. அது வெவ்வேறு இடங்கட்குச் சென்றுள்ளது. உடல் வாழ்க் கையில் அமையும் மாறுதல்கள் அனைத்திற்கும் அடிப்படை யாயிருந்து உறுதி தருவது அகங்காரம், அகங்காரத்தின் வலி வினால் தான் உயிர்களனைத்தும் உடல் வாழ்க்கையைக் கொண்டு செலுத்தி வருகின்றன. உடல் வாழ்க்கையைக் கடந்து அப்பாலுள்ள நிலைக்குச் செல்ல முயல்பவர்கட்கு அந்த அகங்காரம் ஒரு பெருந்தடையாக - பேரிடைஞ்சலாக - ஆகின்றது. இக்கருத்தை தடையற்ற தேரில் அஞ்சுருவாணி போலவே தன்னில் அசையாது நிற்கும் என்கின்றார் அடிகள். அச்சாணியைத்தான் அடிகள் 'அஞ்சுருவாணி என்கின்றார். இராமாயணத்தில் இராவணனைப் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். இவனுடைய பாங்குகளை யெல்லாம் நன்கு அறியாவிடில் இராமனையும் நாம் முழுதும் 5. மிகப் பெரிய தேராகிய திருவாரூர் தேரின் சக்கரங்களுக்கு Ball bearing அமைத்தது கலைஞரின் மூளை என்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/153&oldid=892146" இலிருந்து மீள்விக்கப்பட்டது