பக்கம்:தாயுமானவர்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ 多 மனத்தின் இயல்புகள் 令 135 令 இக்கருத்துக்களைத்தான் அடிகளும் ஈங்கார் எனக்கு நிகர் எனப் பிரதாபித்து இராவணாகாரமாகி இதயவெளி எங்கனும் தன்னரசு நாடு செய்திருக்கும் என்று அகங்காரத்தின் திற மையை எடுத்துக் காட்டுகின்றார். தங்குதடையின்றித் தன் கருத்தை வெளியிடுவது பிரஸ்தாபித்தல்' என்பது. இதுவே கவிதையில் பிரதாபித்தல் என்ற திரிவு வடிவம் கொள்ளுகின் திது. உள்ளத்தில் இருக்கும் பெருவெளியை இதய வெளி: என்று சொல்லுவது மரபு. அந்த இதயவெளியில் தான் மேற்குறிப்பிட்ட விழிப்பு, கனவு, சுழுமுனை ஆகிய மூன்று அவத்தைகளும் (நிலைகளும்) நாடோறும் மாறி மாறி வருகின் றன. இந்த மூன்று நிலைகளின் மீதே ஆங்காரம் தன் ஆதிக்கத் தைச் செலுத்தி வருகின்றது. இராவணன் மூன்று உலகங்களி லும் தன் ஆதிக்கத்தைச் செலுத்தி வந்தான் என்பது ஐதிகம். அவனுக்கு நிகராக இந்த மூன்று அவத்தைகளின்மீதும் அகங் காரம் தன் ஆணையைச் செலுத்தி வருகின்றது. அகங்காரத்தைப்பற்றி இன்னோர் உண்மையையும் நாம் அறிதல் வேண்டும். தானல்லாததனைத் தான் என்று கருது வது அகங்காரம் என்பதனை நாம் அறிவோம். உடலும், அந்தக் கரணங்களாகிய மனம் சித்தம் புத்தி முதலியனவும் புறக்கரணங்களாகிய கண், காது, வாய், மூக்கு முதலியனவும் ஆன்மாவின் உண்மை சொரூபமல்ல. ஆனால், இவை யாவற்றையும் உண்மை சொரூபமாகக் கருதுவதனால் சிற்று யிர்கள் பேருயிர்களாக பரிணமிக்கின்றன. அங்ங்னம் பரிண மித்து வரும் நிலையில் ஆங்காரம் முற்றிலும் அவசியமாகின் றது. அகங்காரம் இல்லையாயின் சிற்றுயிர்கட்கு முன்னேற் றம் இல்லை. மேலே குறிப்பிட்ட தென்னங் குரும்பையின் நிலையை மீண்டும் சிந்திக்கின்றோம். இதில் தொடக்க நிலை யில் மேல்நார், உள்ளிருக்கும் பருப்பு, ஒடு முதலியன வேறுபாடற்ற நிலையிலுள்ளன. முற்றிலும் முதிர்ந்த பின் னரே இவற்றிற்கிடையில் வேற்றுமை தெரிகின்றது. பிறகு தேங்காய் நாரினின்றும் பிரித்தாக வேண்டும். அகங்காரம் தென்னை நார் போன்றது. நல்ல மானிட நிலையை அடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/155&oldid=892148" இலிருந்து மீள்விக்கப்பட்டது