பக்கம்:தாயுமானவர்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத்தின் இயல்புகள் & 137 & 'நான்நான் இங் கெனும்அகந்தை எனக்கேன் வைத்தாய்? நல்வினைதீ வினைஎனவே நடுவே நாட்டி ஊனாரும் உடற்சுமைஎன் மீதேன் வைத்தாய்? உயிர்எனவும் என்னைஒன்றா உள்ஏன் வைத்தாய் 2: - பன்மாலை 5 என்ற பாடற் பகுதியில் இதனைக் காணலாம். இராவணனுக் கும் அகங்காரத்திற்கும் வாசி (வேற்றுமை) இல்லை. சீதாப்பி ராட்டி சிறையிலிருந்த பொழுது இராவணனைச் சிறிதும் நினை யாது சதா இராமச் சிந்தனையிலேயே ஆழ்ந்திருக்கின்றார். இராவணன் தன்னை வெல்ல வந்தபொழுது அவனைத் துரும்பென மதித்து மிகத் திறமையுடன் முறியடித்துவிட்டுத் திரும்பவும் இராமச் சிந்தனையிலேயே ஆழ்ந்து விடுகின்றார். ஆன்மசாதகர்கள் பிராட்டி கொண்ட செயலைக் கடைப்பி டிக்க வேண்டும். அகங்காரத்துடன் போராட வேண்டிய தில்லை. சித்தமிசைக் குடிகொண்டுள்ள அறிவான தெய்வத்தி டம் பரிந்து விண்ணப்பித்து அவனை விடாது வழுத்துவதே சாதகனின் கடமையாகக் கொள்ள வேண்டும். அவன் இறை வனைச் சாரச்சார அகங்காரத்தின் வேகம் தணிந்துவிடும். ஆங்காரம் - ஆணவ மலம்: தாயுமானவர் பாடல்களில் சிலவற்றில் ஆங்காரத்தை ஆணவ மலத்தோடு இசைத்துக் கூறுதலையும் காண முடிகின்றது. ஆணவத்தையும் ஆங்கா ரத்தைப் போலவே பேயெனவே அடிகள் கூறுகின்றார். 'கெட்டவழி ஆனவப்பேய் கீழாக, மேலான சிட்டர்உனைப் பூசை செய்வார்; பராபரமே!” - பராயரம் - 152 என்ற பாடலைக் காண்க. பற்றினதையே பற்றும் செயலுக்கு ஆணவமே காரணம் என்பது அடிகளாரின் கருத்து. 'சொன்னதைச் சொல்லித் துடிக்கின்ற ஆணவப்பேய்க்(கு) இன்னல்வருவ தெந்நாள்? எந்தாய் பராபரமே!” - பராயரம் 159

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/157&oldid=892150" இலிருந்து மீள்விக்கப்பட்டது