பக்கம்:தாயுமானவர்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனத்தின் இயல்புகள் 旁,155 效 'ஏ மனமே, வந்த வரவை மறந்து உலக வாழ்க்கையில் அழுந்திவிட்டாய். இப்படி உன்னைத் தளையில் அழுந்த கற்றுக் கொடுத்தவர் யார்? உனக்கு ஏன் இந்த அறிவு? இனிமேலாவது என் புத்திமதியைக் கேள் - இந்த மதி ஏன் உனக்கு? என் மதி கேள்' பரத்தைச் சாரின் உனக்கு இன்பம் உண்டாகும் (ஏசற்ற - 7) 'நெஞ்சமே ஊசற் கயிறு போன்ற உலக நெறியின் கண்ணே சென்று பற்று என்னும் தளையி னுள் மாட்டிக் கொள்ளாதே. குற்றமற்ற இந்நிலையில் எந்தை மாசற்ற சிவானந்தப் பெருக்கு முழுவதையும் தந்தருளுவன்' (மேலது 1). உலகப் பரப்பையெல்லாம் வீணாக நீ உன்வசப் படுத்திக் கொண்டாலும் ஆனந்தக் கடலில் மூழ்கக் கற்றுக் கொள்ளமாட்டாயோ? திருவருளாகிய எந்தையின் திருவடி யின்கீழ் தாழ்ந்து வணங்காயோ? அங்ங்ணம் வணங்குவாயா யின், நீயும் என்னைப்போல் வாழ்ந்து அழியாதிருப்பாய் (மேலது. 2). 'பேரின்ப வெளி குருவின் பார்வையின்றி நமக்குக் கிடைக்காது. நம்மை ஆளவந்த குருவின் பொன்ன டிக்கீழ் இருக்க என்னிடம் வந்துசேர் (மேலது 3) பண்டையு ளவாதனையால் நீதுன்புறுகின்றாய். உன்னைக் குறை சொல் விப் பயன் இல்லை. அஞ்சல் அஞ்சல்' என்றும் நம்மேல் இரக்கங் கொள்ளும் இறைவனாகிய ஆனந்த கடலில் என் போல் அழுந்த வருவாயாக’ (மேலது 4) மேலும் கூறுகின்றார்: வட ஆலின்கீழ் வீற்றிருக்கும் தெய்வ உருவை வந்துப் பார்த்து உருகக் கற்றுக் கொள். அப்படிச் செய்தால் நீ பூரணத்துவம் அடைவாய்' (மேலது 5) ஒவ்வொரு வழியாக முன்னேறலாம் என்று நான் எண்ணு கின்றேன். உன்னை விட்டு விட்டால் நான் இறைவனிடம் அன்பு செலுத்த முடியாது. இறைவனிடம் பக்தி செலுத்துவ தற்கு நின் துணை வேண்டும். உன் வழியாகத்தான் இறைவ னின் திருவருள் வெள்ளம் பாய்ந்து நான் பயிராய்ப் பிழைந்து வாழவேண்டும். நீ வந்து ஓயாமல் உருகினால் தாயான மோன அருள் உன்னை வந்து சந்திக்கும் (மேலது 6) 'உலகமெலாம் உய்வதற்கு அன்பு நிலை வேண்டும் என்பர் பெரியோர். அந்த அன்பு நிலை உன்னையன்றி இல்லையே' (மேலது 8).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/175&oldid=892170" இலிருந்து மீள்விக்கப்பட்டது