பக்கம்:தாயுமானவர்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 154 & தாயுமானவர் 'இறப்பும், பிறப்பும் பொருந்த - எனக் கெவ்வண்ணம் வந்ததென் றெண்ணியான் பார்க்கின் மறப்பு நினைப்பு மாய்நின்ற - வஞ்ச மாயா மனத்தால் வளர்ந்தது:” - ஆனந்தக் களிப்பு - 11 என்ற பாடலில் இதனைக் கண்டு தெளியலாம். ஒரு பாடலில் மனத்தை வெறுத்துக் கூறுகின்றார் இங்கு "மனமே உன்னை மதியேன்” என்கின்றார். 'எனக்கும் உனக்கும்.உற வில்லை எனத்தேர்ந்து நினக்கஅரி தானஇன்ப நிட்டை - தனைக்கொடுத்தே ஆசான் மவுனி அளித்தான்நெஞ் சே!உனைஓர் காசா மதியேன் நான்' - உடல்பொய்யுறவு - 12 என்ற பாடல் இன்ப நிட்டை கைவரப்பெற்ற பிறகு மனத்தை விளித்துப் பேசும் பேச்சு இது. ஒரு பாடலில் நெஞ்சைக் கடிந்து கூறுவதைக் காணலாம். 'ஏ மனமே, உன்னுடைய கெடுவழிகளையெல்லாம் கட்டி ஒருபுறம் வைத்துவிட்டு உண்மையை ஆராய்ச்சி செய். அடிக்கடி உலகமெங்கும் சுழல்கின்றாய். உனக்கு ஓராயிரம் அறவுரை கூறினாலும் நீ ஒர்வதில்லை. அங்ங்ணமாயின் நீ கெட்டொழிவாய். திருவருளாகிய ஆயுதத்தைக் கொண்டு உன்னை வெல்லுவேன்' (பாய்ப்புலி - 50) என்று பகர்கின் றார். நெஞ்சை அணைத்துக் கொண்டு பேசல்: இதுகாறும் குறை கூறியும் வெறுத்தும் கடிந்தும் வந்த அடிகள் நெஞ்சைத் தம் வசப்படுத்திக் கொண்டு - அரவணைத்துக் கொண்டுபேசவும் செய்கின்றார். அறவுரை வழங்கத் தொடங்குகின்றார். ஒரு குழந்தையை அடிக்கடிக் கடிந்து அடக்க முயல்வதைவிட அதை அன்புடன் அரவணைத்துக் கொண்டு அறவுரை வழங் குதலால் பெரும் பயன் ஏற்படும் என்பதை விவேகமுள்ள தாய்மார் அறிவர். உளவியலாரும் இம் முறையையே வற்பு றுத்துவர். இந்த நிலையைப் பல பாடல்களில் கண்டு தெளிய GỜfi i f}.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/174&oldid=892169" இலிருந்து மீள்விக்கப்பட்டது