பக்கம்:தாயுமானவர்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3> மனத்தின் இயல்புகள் శః 153 டனும், சந்திரகாந்தக் கல் திங்களின் கதிர்கள் பட்டவுடனும், கருங்கல் ஞாயிறும் திங்களும் கூடுகின்ற அமாவாசையன்றும் உருகுவதாகக் கூறும் இலக்கிய மரபு ஒன்று உண்டு. ஆத லால் ஒருகாலும் உருகா நெஞ்சைக் கல்லினும் வலியது என்கின்றார். தம் ஆசிரியர் ஞானம் எனும் தன்மை பேச ஒரு மொழி யைக் கூறினார். அது குருமொழி; அது மலை இலக்கு' (நினைவொன்று -2) அதுதான் சும்மா இரு' என்று சொல்லப் பெறும் மோனநிலை. இதன் பொருளை உன்னி உருகாமைக் காகத் தம் நெஞ்சினைக் கடிகின்றார். 'வன்நெஞ்சோ? இரங்காத மரநெஞ்சோ? இருப்பு:நெஞ்சோ? வயிர மான கல்நெஞ்சோ? அலது மண்ணாங் கட்டிநெஞ்சோ? எனது நெஞ்சம் கருதில் தானே' - ஆசையெனும் 4 என்ற பாடற்பகுதியில் இதனைக் காணலாம். இதன் கண், மரம் ஒருநாளும் உருகாது ஆதலின், அதுபோல ஒருகாலும் மனம் உருகாதிருந்து விடுமோ என்ற ஐயத்தைக் குறிப்பதற்கு 'மரநெஞ்சோ?' என்கின்றார். செயற்கை முயற்சியால் (வெந் தழலால்) உருக்கப்படும் இரும்புபோல மிகவும் கடுமையான தவத்தால் (தவக்கனலால்) மனம் உருகுதல் கூடும் என்ற கருத்தை விளக்குவதற்கு இரும்பு நெஞ்சோ?' என்கின்றார். காலத்தின் இயல்புபற்றிக் கல் ஒரு பொழுதில் உருகுதலால் பக்குவக் காலம் ஏற்படும்பொழுது மனம் தானே உருகுதல் கூடுமோ என்பதை அறிவித்ததற்கு 'கல் நெஞ்சோ என்கின் றார். கல்லினும் வலி குறைந்த மண்ணாங்கட்டி உறுதியாகத் தாக்கியவுடன் உதிர்ந்து போவது போலத் திருவருட் பதிவின் உறைப்பால் மனம் வலியற்று ஒழியுமாதலால் 'மண்ணாங் கட்டி நெஞ்சோ என்று இறுதியில் கூறுகின்றார். நமக்கு ஏற்படும் பிறப்பு - இறப்பு வட்டம்’ (Cycle of births and deaths) மறப்பு நினைப்பு இயல்பினைக் கொண்ட மனத்தின் செய்கையால் வருகின்றது என்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/173&oldid=892168" இலிருந்து மீள்விக்கப்பட்டது