பக்கம்:தாயுமானவர்.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் வினையின் பங்கு 哆 16世 必 ‘'வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம் ஈண்டும் முயலப் படும்.” (குறள் 265) என்று கூறியுள்ளமை சிந்திக்கத்தக்கது. இதுகாறும் இந்நிலவுலகில் அறிவுடையவராக விரும்பி முயன்றவர் அறிவு பெறாமல் இருந்ததில்லை; ஒழுக்கத்தைப் போற்றி வாழ முயன்றவர் விரும்பியவாறு அதனைப் பெறத் தவறியதும் இல்லை; அவாவை அறுத்தொழிக்க வேண்டும் என்று உண்மையாக முயன்றவர் முயற்சியின் பயனைப் பெறாததும் இல்லை; இவ்வாறே மற்ற நற்பண்புகளை விரும் பிப் பாடுபட்டவர்கள் அவ்வவற்றை அடைந்து முன்னேறி யுள்ளனர். ஆனால், செல்வம் பெற வேண்டும் என்று விரும்பிப் பாடுபட்டவர்கள் எல்லோரும் செல்வம் பெற வில்லை; பாடுபட்டவர்களில் ஒரு சிலரே பயன் அடைந்துள் ளனர். பாடுபடாமல் செல்வத்தைப் பற்றிக் கனவு காணாமலி ருந்த சிலரும் பெற்றுள்ளனர். பெற்ற செல்வத்தை நுகர்வதி லும் இந்நிலையையே காண்கின்றோம். பொருள்களை நுகர. வேண்டும் என்று விரும்பிய எல்லோரும் நுகர்வு பெற வில்லை. அவர்களுள் சிலரே பெற்றுள்ளனர். பொருள் நுகர்வைப் பற்றி எண்ணாமல் வாழ்ந்தவர்கள் எதிர்பாராமல் பெற்று நுகரவும் முடிந்துள்ளது. ஆனால், அறிவு, ஒழுக்கம் முதலிய துறைகளில் உண்மையாக முயன்றவர் பெறாததும் இல்லை; முயலாதவர் பெற்றதும் இல்லை. இவ்வாறு ஆராய்ந்து நோக்கினால் புறவாழ்க்கைத் துறைகளில் ஊழ் அல்லது கன்மத்தின் அமைப்புக்கு ஏற்றவாறு எல்லாம் நடை பெறுவதையும், அகவாழ்க்கைத் துறைகளில் அது மக்க ளுக்கு உரிமை கொடுத்திருத்தலையும் கண்டு மகிழலாம். மூலவினை. இந்த எண்ணங்களின் அடிப்படையில் தாயு மானவர் பாடல்களில் வினைபற்றி வரும் பாடல்களை நோக்குவோம். ஆணவமலத்தால் பிணிக்கப்பெற்ற உயிர் 2. செல்வர்கள் பலருள் உப்பு, சர்க்கரை போன்ற சாதாரண நுகர்பொருள்கூட தள்ள வேண்டுமென்று மருத்துவர் தடை விதித்துள்ளமையைச் சிந்திக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/181&oldid=892177" இலிருந்து மீள்விக்கப்பட்டது