பக்கம்:தாயுமானவர்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழ்வில் வினையின் பங்கு & 173 & பஞ்சேந்திரியங்களும் இல்லாது போய்விடின் புறஉலகு இருந்தும் இந்திரியங்கள் இல்லாதவனுக்கு அது காட்சிக்கு வருவதில்லை. பஞ்சேந்திரியங்களின் வாயிலாகப் புறஉலகம் முற்றும் காட்சிக்கு வருகின்றது. அந்தக்கரணம் அல்லது அறிவு அதை முறையாகப் பாகுபடுத்தும்பொழுது மனிதன் பெறுகின்ற அண்டபகிரண்டங்களைப் பற்றிய ஞானமாகின் றது. இதைக் கடந்து அவன் துரிய நிலைக்குப் போக முயலு: கின்றபொழுது இந்தப் பஞ்சேந்திரியங்களையும் புறக்கணிக் கும் நிலை வருகின்றது. அந்தக்கரணங்களாகிய சித்தம், மனம், புத்தி, அகங்காரம் ஆகியவையும் ஒய்ந்துவிட வேண் டும். ஆனால், இவை புற உலகில் சென்று பழகியிருப்பத னால், இவை எளிதில் அடங்குவதில்லை. இவற்றின் செயல் ஞானிக்கு உகந்ததன்று. ஞானியின் ஞானக் காட்சிக்கு இவை தடையாகின்றன. தடையாயிருக்கும் பாங்கைத்தான் அடிகள் கருவி கரணங்கள் ஒய கண்மூடி ஒருகணம் இருக்க என்றால் பாழ்த்த கர்மங்கள் போராடுதே' என்கின்றார். எந்தச் செயல் மனத்தில் இனியதாகவும் இன்னாததாக வும் பதிவு பெறுகின்றதோ அதுவே கர்மமாகும். செயல்கள் யாவும் மனத்தில் விதவிதமான பதிவுகளை உண்டு பண்ணு கின்றன. இப்பதிவுகள் சம்ஸ்காரங்கள் என்று வழங்குகின் றன. விருத்திகள் என்றும் இவற்றை இயம்புவதுண்டு. 5. பாசத்தால் கட்டுண்ட உயிர் ஒருகாலத்தில் பாசத்தினின்று நீங்கும். இவ்வாறு தீங்குவது மூன்று நிலைகளில் நடைபெறும். இதை அவத்தை என்று குறிப்பர் சித்தாந்திகள். இது கேவலம், சகலம், சுத்தம் என்று மூன்று வகைப்படும். இம்மூன்று நிலைகளும் காரண அவத்தை என்று வழங்கப் பெறும். இறைவன் உடம்பைக் கூட்டுவதற்கு முன் இருந்த கேவல நிலை அநாதி கேவலம். அன்றாடம் வரும் கேவல நிலை நித்திய கேவலம். உயிர்கள் உடம்பை எடுத்து வாழும் நிலையில் சாக்கிரம், செப்பனம், கழுத்தி, துரியம், துரியாதீதம் (இவை அருந்தமிழில் நனவு, கனவு, உறக்கம், பேருறக்கம், உயிர்ப்படங்கல் என்பன) என்னும் ஐந்து நிலை வேறுபாடுகளை உடையனவாக இருக்கும். இந்நிலைகள் 'காரியாவத்தை என வழங்கப்பெறும். இவற்றின் விவரங்களையும் இவை செயற்படும் முறைகளையும் சித்தாந்த நூல்களில் கண்டு தெளிக. இவ்வாசிரிய ரின் சைவ சித்தாந்தம் - ஓர் அறிமுகம் (கழக வெளியீடு) என்ற நூல் இதற்குத் துணையாக இருக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/193&oldid=892190" இலிருந்து மீள்விக்கப்பட்டது