பக்கம்:தாயுமானவர்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

令 ±84 够 தாயுமானவர் இறைவனது திருவடிகளில் ஆன்மா பொருந்துகின்றது என் பதே இதன் கருத்து. தாளும் தலையும் தமிழ் இலக்கண விதிப்படிப் புனரும்போது தாடலை ஆகும். தாள்' என்பதி லுள்ள 'ளகரம்'(ள்) மறைய, தலை' என்பதிலுள்ள தகரம் '(த) டகரமாக'(ட) மாறித் தாடலை ஆகின்றது. இதனை இரு சொற்கள் எனவும் கொள்ள முடியாது; ஒரு சொல் எனக் கருதுவதும் இயலாது. ஒருவிதத்தில் இஃது ஒரு சொல்; இன்னொரு விதத்தில் இருசொல். இதைப் போன்றதே இறை வனோடு ஆன்மா ஐக்கியப்படும் விதமும் என்பதே சித்தாந் தத்தின் முடிவாகும். "தாடலைபோல் கூடியவை தானிகழ வேற்றின்பக் கூடநீ யோக மெனக் கொள்' என்ற உமாபதிசிவத்தின் அருள்வாக்கையும் காண்க. இவ்வாறு கூறியது உயிரினது தாழ்வும் இறைவனது உயர்வும் காட்டு தற்காகும். தாயுமான அடிகளும், 'ஆடலையே காட்டிஎனது அடல்ஒழித்து ஆண்டான்பொன் தாள்தலைபோல் குடித் தழைக்குநாள் எந்நாளோ!' - எந்நாட். நிற்கும் நிலை 22 என்ற கண்ணியில் இதனைக் காட்டுவர். இறைவனும் உலகமும் பொருட்டன்மையால் வேறாயி னும் கலப்பால் வேற்றுமை தோன்றாதவாறு இறைவன் உல கத்தோடு கலந்துள்ளான் என்று அறிவுறுத்தற்கெனத் தெரிந்து அத்துவித பாவனை செய்வதே ஞானநெறி என்பது அடிக எளின் கருத்து. 'அத்துவிதம் என்ற அந்நியச்சொற் கண்டுஉணர்ந்து சுத்த சிவத்தைத் தொடருநாள் எந்நாளோ!' - எந்நாட். நிலைபிரிந்தோர் 4 'ஒன்றிரண்டும் இல்லதுவாய், ஒன்றிரண்டும் உள்ளதுவாய் நின்ற சமத்துநிலை நேர்பெறுவ தெந்நாளோ!' - எந்நாட். நிற்கும் நிலை 15 7. திருவருட்பயன் - 8.4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/204&oldid=892202" இலிருந்து மீள்விக்கப்பட்டது