பக்கம்:தாயுமானவர்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 204 & தாயுமானவர் என்ற கண்ணியால் தெளியலாம். ஆனால், இந் நிலையை அடைதல் எளிதன்று என்பதை, "சும்மா இருப்பதுவே சுட்டற்ற பூரணமென்(று) எம்மால் அறிதற் கெளிதோ? பராபரமே!” - மேலது 70 என்ற கண்ணியில் புலப்படுத்துகின்றார். "சும்மா இருக்கச் சுகம்.உதய மாகுமே” - உடல் பொய்வுறவு - 5.2 "சும்மா இருக்கச் சுகம்சுகம் என்று சுருதி எல்லாம் அம்மா நிரந்தரம் சொல்லவும்" - பாயப்புலி - 38 "நானெனவும் நீஎனவும் இருதன்மை நாடாமல் நடுவே சும்மா தானமரும் நிலைஇதுவே சத்தியம்சத் தியம்எனநீ தமிய னேற்கு மோனகுரு வாகியும்கை காட்டினையே’ - ஆசையெனும் - 32 என வருவனவெல்லாம் சும்மா இருக்க வேண்டும் என்ற இவர்தம் விருப்பத்தைத் தெளிவாகப் புலப்படுத்துகின்றன. ‘சும்மாவிருத்தல் என்பதையே அடிகள் துங்காமல் துங்கு தல்’ என்றும் குறிப்பிடுவர். 'தூங்காமல் தூங்கிச் சுகப்பெருமான் நின்னிறைவில் நீங்காமல் நிற்கும் நிலைபெறவும் காண்பேனோ' - காண்பேனோவென் கண்ணி - 10 'தூங்கிவிழித் தென்னைபலன்? தூங்காமல் தூங்கிநிற்கும் பாங்குகண்டா லன்றோ? பலன்காண்பேன் பைங்கிளியே' - பைங்கிளிக் கண்ணி 30 என்ற பாடல்களில் இதனைக் காணலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/224&oldid=892224" இலிருந்து மீள்விக்கப்பட்டது