பக்கம்:தாயுமானவர்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

త్య 206 • தாயுமானவர் இந்த ஒரு மொழிதான் எது? என்ற வினா எழுகின்றது. இதனை ஓங்காரம் எனவும் சும்மா இரு' எனவும் திரு ஐந் தெழுத்து எனவும் கொள்ள இடத்தருகின்றது. "ஓங்கார மாம்ஐந் தெழுத்தால் புவனத்தை உண்டுபண்ணிப் பாங்கா நடத்தும் பொருளே!' - பாயப்புலி , என்ற இடத்தில் ஓங்காரம் ஐந்தெழுத்தாக விரிவதைக் காண லாம். ஓங்காரத்தை ஒலிக்கும்போது நாதமும், எழுதும்போது விந்துவும் உகர அகர மகரங்களாகப் பிரியும்போது மூவெ ழுத்தும் ஆகப் பிரிவதால் அது ஐந்தெழுத்து என்பது தெளிவு படுகின்றது. 'அஞ்செழுத்தின் உண்மை அதுவான அப்பொருளை நெஞ்சழுத்தி ஒன்றாகி நிற்குநாள் எந்நாளோ?” - எந்நாட். கண்ணி நிலைபிரிந்தோர் 13 'சும்மா' என்னும் சொல் 'சும்ம்' என்பதன் விரிவு. இச்சொல்லில் உ,ம்,அ என்ற மூன்றறெழுத்துகள் உள்ளன. இவை ஓங்காரத்தின் உறுப்புகள். சகரம் மகரத்தோடு சேர்ந்து அம்ச மந்திரமாகிய அசபையைக் குறிக்கும் என்பர். "சும்மா இருசொல் லறஎன் றலுமே அம்மா பொருளொன்றுமறிந் திலனே' " என்ற அருணகிரிநாதரின் அருள் மொழியை மிகவும் ஆர்வத்து டன் அடிகள் போற்றுவர். 'ஐயா அருணகிரி அப்பா வுனைப்போல மெய்யாக ஒர்சொல் விளம்பினர்யார்?" - உடல் பொங் புறவு 25 என்ற பாடலால் இதனையறியலாம். பிறிதோர் இடத்தில், 20. கந்தரதுபூதி - 12 தாயு-15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/226&oldid=892226" இலிருந்து மீள்விக்கப்பட்டது