பக்கம்:தாயுமானவர்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శః 2 O 7 ళ புனிதமெனும் அத்துவிதம் 'கந்தரது பூதிபெற்றுக் கந்தரது பூதிசொன்ன எந்தைஅருள் நாடி இருக்குநாள் எந்நாளே” - எந்நாட். அடியார் வணக்கம் - 8 என்று கூறினதும் காண்க. திருவருள் நாட்டம்: சும்மா இருந்து ஞான நிட்டை கூடு தற்கு திருவருட்டுணையை நாடி நிற்றல் வேண்டும் என்பது அடிகளின் கருத்து. திருவருட் கனனாலேயே அனைத்தையும் நோக்க வேண்டும் என்பார். 'அருளால் எவையும் பார்என்றான் - அத்தை அறியாதே சுட்டிஎன் அறிவாலே பார்த்தேன்; இருளான பொருள்கண்ட தல்லால் - கண்ட என்னையும் கண்டிலன் என்னேடி? தோழி!" - ஆனந்தக்களிப்பு 13 என்று தன் அநுபவத்தைப் புலப்படுத்துவர். "அப்படியும் அந்நிறமும் அவ்வண் ணமும் அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன் இவன் இறைவன் என்றெழுதிக் காட்டொ னாதே' ' என்று வாகீசரின் வாய்மொழியும் ஈண்டு சிந்தித்தல் தகும். இதனால் நிலையற்ற உலகப் பொருள்களை ஆணவம் கலந்த பார்வையால் நோக்குமிடத்துப் பொருள்களின் உண் மைத் தன்மை புலனாகாமற் போவதல்லாமல் அந்தப் பொருள் வயமாய் நிற்கும் தன்னையும் அறிதற்கிடமில்லை என்று தெரிவித்தருளினமையைக் காணலாம். ஞானம் உதித் தற் பொருட்டு ஆசையின்மை இயற்கையாக அமைந்தால் அது தானே கனிந்த கனியாதலும் உண்டு என்றும் பிரா னனை யோகத்தால் வசப்படுத்தி மனஒருக்கம் கொண்டு பற்றுதல் கனிவிக்க வந்த கனி என்றும் தெரிவித்தருளுவார் அடிகள். 21. அப்பர் தேவா.5.97:10 (தாண்டகம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/227&oldid=892227" இலிருந்து மீள்விக்கப்பட்டது