பக்கம்:தாயுமானவர்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர் பெருமக்கள் & 亨 217 夺 & 令 % அடிகள் சித்தர்கள்பால் வேண்டுவன: "இந்த அகன்ற பூ உலகில் அடியேன் இருக்கும்பொழுதே திருவருளாகிய வான மண்டலத்தினின்றே நிலைத்த வரமாக இன்ப மழையைப் பொழிகின்ற மேகத்தோடு சேர்ந்து அறிவு பரவசப்படும்படி செய்வது நன்று; அத்தகைய நிலையில் உறுதி உறும்வரை இந்த உடம்பின் கூத்து கலையாமல் குண்டலினி சக்தி என் னும் அன்னையின் அருளினாலே ஆகாயத்திலுள்ள மதியின் அமுதமானது இடையறாது பொழியப் பெறுமாறு அடியேன் வேண்டுவேன்' (சித். கணம் - 4) என்கின்றார். சித்தர்களின் இயல்பு: சித்தர்கள் அட்டாங்க யோகம் வாய்ந்தவர்கள். "மெய்திகழும் அட்டாங்க யோகபூ மிக்குள்வளர் வேந்தரே!” - சித்.கண 5 என்றும், “என்றைக்கும் அழியாத சிவராஜ யோகமாய்” - சித்.கண. 6 என்றும் வரும் அடிகளின் வாக்குகளால் அறியலாம். யோகம்: நுண்ணிய உடம்பிலுள்ள சுழுமுனை என்னும் நாடியின் வாயிலாகப் பிராணவாயுவின் உதவியால் மூலாதா ரத்துக்கு மேலுள்ள அனலைச் சிரசின் நடுவிலுள்ள மதிமண்ட லத்தில் சேர்த்து அதன்கண் நின்று ஒழுகும் அமுதத்தினை உடலெங்கும் பரவச் செய்து நெடுநாள் உயிரோடு இருத்தலா கிய காய சித்தியைக் கொண்டு இறைவனை வழிபடும் முறை யாகும் இது. 'மூலப் பிராணனோடு அங்கியைச் சோமவட் டத்தடைத்தும் சொல்லரிய அமுதுஉண்டும் அற்பஉடல் கற்பங்கள்தோறும் நிலைநிற்க ஈறு சித்தி செய்தும்” என்ற பாடல் பகுதியில் யோகத்தின் இயல்பு குறிக்கப் பெற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/237&oldid=892238" இலிருந்து மீள்விக்கப்பட்டது