பக்கம்:தாயுமானவர்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 夺 தாயுமானவர் 旁 拳 ருப்பதைக் காணலாம். யோகத்தில் ஆறு ஆதாரமும் மூன்று மண்டலமும் இன்றையமையாதவை. 'கெடிகொண்ட தலம்.ஆறும் மும்மண்ட லத்திலும் கிள்ளாக்குச் செல்ல' - சித்.க.ை 8 (கிள்ளாக்குச் செல்ல - அதிகாரம் செலுத்த) என்ற அடியில் இதனைக் காணலாம். விளக்கம்: இடைகலை, பிங்கலை, சழுமுனை என்ற மூன்று நாடிகளும் ஆறு ஆதாரங்களையும் மூன்று மண்டலத் தையும் ஊடுருவிச் செல்லுவன. சுழுமுனை என்பது உடம் பின் நடுவாக உள்ளது. இடைகலை என்பது இடது நாசியி னால் உள்ளே வாங்கும் மூச்சாகும். பிங்கலை என்பது வலது நாசியின் வழியாக உள்ளே செல்லும் மூச்சாகும். சுழுமுனை என்பது இரண்டு பெருவிரல் வரையும் இரு பிரிவாகவும் மூலாதாரத்தினின்றும் ஒரு பிரிவாகவும் உள்ளது மூலாதாரம் என்பது குறிக்கும் குதத்திற்கும் (Buttocks) நடுவே வட்டவடி வாக உள்ளது. அதன் நடுவே மின்னல் ஒளியுடைய முக்கோ ளம் ஒன்று உள்ளது. அம்முக்கோணத்திற்கு நடுவே நூலி தழ்ப்பூ ஒன்று உள்ளது. அந்தப் பூவிற்கு நடுவில் ஓங்கார எழுத்து நிற்கும். அந்த ஒங்காரத்திற்கு நடுவில் கணபதியும் அவருடைய பச்சை நிறமான சக்தியும் எழுந்தருளி இருப்பர். ஓங்காரத்திற்கு அணித்தாக உள்ளது குண்டலினி சக்தி, அது மூன்றரை வளையம் உள்ள பாம்புபோல் மூலாதாரத்திலுள்ள சுழுமுனையின் வாயை அடைத்துக் கொண்டுள்ளது. மூலாதாரத்திற்குமேல் இரண்டங்குலத்தில் சுவாதிட்டானம் என்னும் ஆதாரம் உள்ளது. அது நாற்கோணமுடையது. அதன் நடுவில் ஆறிதழ்ப்பூ ஒன்று உள்ளது. அதன் நடுவில் நகர எழுத்து உள்ளது. அதன்கண் அயனார் தமது சக்தியோடு இருப்பார். இந்த இடம் பொன்னிறமானது. இது முதற்கலை யின் கூறு. உந்திக்கமலமே மணிபூரகம் எனப்படும். இஃது ஏழாம் பிறைபோல் இருக்கும். இதன் நடுவே பத்து இதழையுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/238&oldid=892239" இலிருந்து மீள்விக்கப்பட்டது