பக்கம்:தாயுமானவர்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ சித்தர் பெருமக்கள் & 219 & மலர் வட்டமாக இருக்கும். இதன் நடுவில் மகர எழுத்து உள்ளது. அதன்கண் திருமால் தனது சக்தியோடு இருப்பர். இது பளிங்கு நிறமுள்ளது. இஃது இரண்டாம் கலையின் கூறு. இதயகமலம் அனாகதம் எனப்படுவது. இதன்கண் ஒரு முக்கோணமும் அதன் நடுவில் பன்னிரண்டு இதழுடைய ஒரு பூவும் உள்ளன. அந்தப்பூவின் நடுவில் சிகார எழுத்துள்ளது. அதன் நடுவில் உருத்திர மூர்த்தி தமது சக்தியோடு வீற்றிருப் பார். இது மூன்றாம் கலையின் கூறு. கழுத்திலே விசுத்தி என்னும் ஆதாரம் உள்ளது. இஃது அறு கோணமாயிருக்கும். அதன் நடுவில் பதினாறு இதழ்ப் பூவொன்று உள்ளது. அதன் நடுவே வகார எழுத்திருக்கும். அதன் நடுவில் மகேசுவரர் தமது சக்தியோடு எழுந்தருளியி ருப்பார். இது நான்காம் கலையின் கூறு. இது மேகநிறமுள்ளது. ஆஞ்ஞை என்னும் ஆதாரம் இரண்டு புருவங்களுக்கும் இடையே உள்ளது. இது மூவிதழ்ப் பூவொன்றின் நடுவில் யகாரத்தில் சதாசிவமூர்த்தி மனோன்மணியுடன் எழுந்தருளியி ருப்பார். இது படிக நிறமாய் ஐந்தாங் கலையின் கூறாக உள்ளது. இந்த ஆறு ஆதாரங்களிலும் உள்ள பூக்களின் இதழ் துணிகள் கிரந்த எழுத்திலுள்ள ஐம்பத்தொரு எழுத்துப் போலி ருப்பதால் ஐம்பத்தொரு எழுத்துகளும் அவற்றில் உள்ளன என்று கூறுதல் மரபு.' கிரந்த எழுத்து தமிழ் எழுத்திலிருந்து (வடமொழி ஒலித் துணையுடன்?) வந்தவை. கூடிகரம் ஐம்பத்தொரு எழுத்தில் தனி எழுத்தன்று. இந்த ஆதாரங்கட்கு உயிரான மந்திரங்கள் பிரணவமும் (ஒங்காரமும்) ஐந்தெழுத்தும் (சிவாயநம:) ஆம். 1. மூலாதாரம் 4 முதற்கலை 6 இரண்டாம் கலை 10: மூன்றாம் கலை 12; நான்காம் கலை 16, ஐந்தாம் கலை 3; ஆக 4 + 6 10 + 12 + 16 + 3 = 51 எழுத்துக்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/239&oldid=892240" இலிருந்து மீள்விக்கப்பட்டது