பக்கம்:தாயுமானவர்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ 220 தாயுமானவர் "ஓங்காரம் ஆம்ஐந்து எழுத்தால் புவனத்தை உண்டுபண்ணிப், பாங்காய் நடத்தும் பொருளே, அகண்ட பரசிவமே!” - பாயப்புலி 9 என்ற பாடற்பகுதியையும் காண்க. கூடிகாரமானது ககரமும் சகரமும் சேர்ந்தது. ஆதலால் அதைத் தவிர்த்து எழுத்துகள் ஐம்பதாகின்றன. 'ஐம்பதெழுத்தே அனைத்தும் வேதங்களும் ஐம்பதெழுத்தே அனைத்துஆ கமங்களும் ஐம்பதெழுத்தின் அறிவை அறிந்தபின் r". ஐம்பதெழுத்தும்போய் ஐந்தெழுத் தாமே" என்ற திருமூலர் வாக்கால் இஃது அறியப்பெறும். மும்மண்டலங்கள்: இவை நெருப்பு மண்டலம், ஞாயிற்று மண்டலம், திங்கள் மண்டலம் என்பனவாகும். மூலாதாரத் திற்கு இருவிரற்கிடைக்கு மேலிருப்பது நெருப்பு மண்டலம். இது முதற்பூதமும் இரண்டாம் பூதமும் கூடினவிடத்தில் நாற்கோணமாய் நடுவேயொரு முக்கோணமுடையதாய் நாலி தழ்ப்பூப் போலிருக்கும். ஞாயிற்று மண்டலம் உந்திக்கு நாலு விரலுக்கு மேலே இதயகமலத்துக்கு அருகாக அறுகோண மாய் எட்டிதழ்ப்பூப் போன்று இருக்கும். திங்கள் மண்டலம் தலைநடுவில் மிகுந்த ஒளியோடு அமுதகலை உள்ளதாய் விளங்கும். சிலர் நெருப்பு மண்டலம் முதல் உந்தி வரையி லும் ஞாயிற்று மண்டலம் உந்தி முதல் கண்டம் வரையிலும், திங்கள் மண்டலம் கழுத்து முதல் புருவம் வரையிலும் வியாபித்து இருப்பதாகக் கருதுவர். அசபை என்பது மூச்சினை இழுக்குங்காலும் வெளிவிடுங் காலும் ஏற்படும் நுண்ணொலியாகிய மந்திரம். அதை அம்சம் எனவும் சோகம் எனவும் வழங்குவர்; ஊமை மந்திரம் எனவும் உரைப்பர். திங்கள் மண்டலம் கீழ்நோக்கிப் பொழியும் 2. திருமந்.நாலா.தந்திருவம்பலச் சக்கரம் - 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/240&oldid=892242" இலிருந்து மீள்விக்கப்பட்டது