பக்கம்:தாயுமானவர்.pdf/244

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& 224 & தாயுமானவர் 'யோகியர்க்கே ஞானம் ஒழுங்குஆம்பே ரன்புஆன தாகியரும் யோகம்முன்னே சார்ந்தோர் பராபரமே” - பராமரம் 99 என்பது குறிப்பிட்டனர் அடிகள். சித்தர்கள் இயற்றும் அற்புதச் செயல்கள்: இவற்றை அடிகள் சித்தர்கணம் முதல் மூன்று பாடல்களில் விளக்குகின்றார். “மனவேகம் போன்ற வேகத்துடன் விரைந்து சென்று ஒடி ஆடி வரக்கூடியவர்கள். மேருவின் உச்சியில் விளங்கும் துருவத்தின் வரையிலும் சென்று ஆழிப்படையை ஏந்திய திருமால்போல் வல்லமை படைத்தவர்கள். ஏழு கடல்களை யும் உள்ளங்கை அளவாக அடக்கிப் பருக வல்லவர்கள். விண்ணவர் உலகத்தையும் இந்திரனது வெள்ளை யானை யையும் கைக்கு எளிய பந்தாக உருட்டி விளையாட வல்ல வர்கள். வான மண்டலங்களையெல்லாம் கடுகுக்குள் புகுத்தி எட்டுப் பெருமலைகளையும் காட்ட வல்லவர்கள். இவை போன்ற வேறுவேறு மேலான சித்திகளையெல்லாம் விளை விக்க வல்லவர்கள்' (பாடல் 1) 'இசைப் பாட்டையுடைய வண்டுகள் நெருங்கி வளர் கின்ற கற்பகமரத்து நிழலையும் இப்புவிக்குக் கொண்டுவரும் ஆற்றல் படைத்தவர்கள். சங்கநிதி பதுமநிதி என்ற இரண்டை யும் பணிகொள்ள வல்லவர்கள். இரந்து பிழைப்போரையும் பேரரசராக்கும் ஆற்றல் படைத்தவர்கள். ஊழிமுடிவில் உண் டாகும் பெருவெள்ளத்தையும் ஒரு கிணற்றில் அடக்கி வைக் கும் வல்லமை மிக்கவர்கள். உடைந்த ஒட்டினை எடுத்து ஒளிவீசும் ஆயிரத்தெட்டு மாற்றுள்ள பொன்னாக மாற்ற வல்லவர்கள். ஆதிசேடனும் இளைப்பாறும்படி யோக தண் டத்திலே உலகினைச் சுமக்கும் ஆற்றல் மிக்கவர்கள்' (பாடல் 2). 'ஐம்பூதங்களும் ஒடுங்கிய காலத்துப் பரவெளியில் தங்கியிருக்கவல்லவர்கள். யுக முடிவில் பிரளய வெள்ளத்தில் மிதந்து நீர்மேல் உறையும் வண்டுபோலச் சுழன்று சிவயோ கத்தில் இருக்கும் வல்லமை படைத்தவர்கள். ஏழு மேகங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/244&oldid=892246" இலிருந்து மீள்விக்கப்பட்டது