பக்கம்:தாயுமானவர்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தர் பெருமக்கள் 哆 225 * ளும் ஒன்றுகூடி மழை பொழியும் காலத்திலும் மதி மண்டலத் தில் தங்கி விளங்க வல்லவர்கள். அயன் அரிமுதலியோர் முடிவெய்தும் காலத்திலும் சிவபிரான் அருளால் உலகத்தில் உற்சாகமாக உலவும் உரம் படைத்தவர்கள். உலகங்கள் எல்லாம் கீழ் மேலாகப் புரளும்படிப் பெருங்காற்று வீசுங்கா லத்திலும் தாரண யோகத்தினால் மாமேருபோல் அசையாமல் நிற்க வல்லவர்கள்' (பாடல் 3). அட்டமா சித்திகள்: சிறந்த சித்திகள் எண் வகைப்படும். அணிமா என்பது அணுவிலும் மிக நுண்ணிய வடிவு பெற்று நிற்றல். இவ்வடிவுடன் எத்திசையிலும் ஏகுதல் எளிது. மகிமா என்பது, மேருவிலும் மிகப் பெரிய வடிவுற்றிருத்தல். இச் சித்தி கைவந்தவர் மேருவின் முடிவிலுள்ள ஒளி வட்டமாகிய துருவ மண்டலத்தினை அடைதல் அரிதன்று." கரிமா என்பது உலகப் பொருள்களை நுகர்ந்தும் அவற்றால் கட்டுப்பட்டு மயக்கம் உறாமை, இஃது உயர்ந்த முத்திக்குத் தகுதி கொடுக் கும். இலகிமா என்பது காற்றினும் மெல்லிய வடிவத்தோடு நிற்றல். இதனால் பிரளய காலத்திலும் நீர்மேல் உலாவும் வண்டுபோல உலாவலாம். பிராப்தி (பிராத்தி) என்பது மனத் தால் எண்ணியதை எண்ணியவாறு பெறுதல். இதனால் கற் பக நிழலும் சங்கநிதி, பதுமநிதி முதலியனவும், விரும்பிய வாறு பெறுதல் கூடும். இரப்பவரை மன்னராக்குதலும் ஒட் டைச் செம்டொன் ஆக்குதலும் கூடும். பிராகாமியம் என்பது மனத்தினால் ஆயிரம் மகளிரைப் படைத்து ஆயிரம் வடிவாயி ருந்து அவர்களோடு விளையாடுதல். இதனால் எவ்வுலக போகங்களையும் எளிதில் பெறலாம். ஈசத்துவம் என்பது அயன் முதலியோரிடத்தும் தன் ஆணை செலுத்துதல். இத னால் அயன் பதவிக்கு மேலான பதவியேற்றலின், அத்தே வர்கள் முடிவு காலத்திற்குப் பின்னும் இறைவனருளால் நிலைபெற்றிருத்தல் கூடும். வசித்துவம் என்பது, அகிலம் முழுவதையும் தன் வசமாக்குதலும், அகிலத்தைப் படைத்த லுமாம். குறுமுனிவர்போல் ஏழு கடலையும் உளுந்தளவாக்கி 4. மேருவின் உச்சியிலுள்ள ஒளி வட்டத்தினை தவம் செய்து துருவன் என்பவன் அடைந்தானாதலின் அதற்குத் துருவ மண்டலம் எனப் பெயர் வழங்கலாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/245&oldid=892247" இலிருந்து மீள்விக்கப்பட்டது