பக்கம்:தாயுமானவர்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

& ☾ 哆 o & 226 தாயுமானவர் அருந்துதலும், பிரளய வெள்ளத்தைக் கிணற்றிலடக்குதலுமா கிய பலவகை அற்புதங்களை இயற்றுதலும் அகிலத்தை யோக தண்டத்தால் பிணித்தலும் இதனுள் அடங்கும். இன்னும் சங்கற்பசித்தர் என்பவரைப் பற்றியும் அடிகள் (கருணாகரக் கடவுள் 10ஆம் பாட்டில்) சிறப்பாகப் பேசுவர். அவர்கள் எக்காலத்திலும் பிறர்க்கு உதவுவார்கள். இன்சொல் லையன்றிக் கடுஞ்சொல் என்றும் பகரார். குற்றமாகிய பொய் யினைச் சொல்லார். இரக்கம் அவர்தம் உயிர்நாடி. கொலை செய்ய ஒருப்படார். அவர் நினைத்ததை நினைத்தபடியே நடைபெற இறைவன் அருள்புரிவானாதலின், அவர் உள்ளத் தில் உறைகின்ற கற்பகமரம் ஆவர். பிரம்மரந்திரமாகிய தலை நடுவிற்குப் பன்னிரண்டு அங்குலத்திற்கு அப்பாலுள்ள பெரு வெளியிலே பரம்பொருளாகிய சிவபெருமானைக் கண்டு களிக்கும் பெரும் பேறு பெற்றவர்களே சிறந்த யோகியர் என்று கூறுவதை, 'ஒன்று.இரண்டாய் விவகரிக்கும் விவகாரம் கடந்து, ஏழாம் யோக பூமி நின்று, தெளிந் தவர்பேசா மெளனநியா யத்தை' - மண்டலத்தின் 2 என்றும், 'உன்ம ணிக்குள் ஒளிர்பரம் சோதியாம்' - பொன்னைமாதரை 38 என்றும் இதனை அடிகள் குறிப்பிட்டுள்ளதை அறிந்து மகிழ லாம். ஏழு யோக பூமி என்பது, ஆறு ஆதாரத்தையும் பிரம்மரத்தி ரத்தையுமேயாகும். அவற்றைக் கடந்தவர் துவாதசாந்தப் பெருவெளியில் முதல்வனைக் காண்பவர். நிலமேழும்' என்று குமரகுருபர அடிகளும் குறிப்பிடுவர். "அஞ்ஞானபூமி' ஏழு என்று அடிகள் குறித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/246&oldid=892248" இலிருந்து மீள்விக்கப்பட்டது