பக்கம்:தாயுமானவர்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் இறப்பும் & 5 & என்பவற்றால் திருவருட்பெற்றியோர்ந்து அதனை எப்போ தும் பாடியும் தேடியும் பயன்பெறும் ப்ேரவாவினைக் கண்டு தெளியலாம். அலுவலில் அமர்தல்: இந்நிலையில் திருச்சிராப்பள்ளி அர சர் குடும்பத்தில் இரண்டு தலைமுறைகள் கழிந்தன. அதாவது, முத்துக்கிருட்டின நாயக்கரும், முத்து வீரப்ப நாயக்கரும் மறைந்து விசயரங்க சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்கு வந்தார். இவரது ஆட்சிக் காலத்தில்தான் கேடிலியப்பப் பிள்ளை சிவப்பேறு எய்தினார். அரசர் தாயுமானவரை வரவழைத்து அவர்தம் ஆற்றலைப் பரிசோதனையாலறிந்து மிக வியந்து தந்தை வகித்து வந்த பதவியை மைந்தருக்கு நல்கினார். உலகியலில் தமக்கு வழிமுறையாக வந்த அலுவலைத் தாயுமானவர் ஏற்று அரசாங்கக் கடமையைச் செவ்விதின் இயற்றி வருவராயினர். எனினும் உலக நிலையாமையை உணர்த்து, சிவ நுகர்ச்சிப் பேரின்பப் பேற்றினையே பெரி தும் நாடலாயினர்; ஆன்ம இலாபத்தைப் பெறுவதிலேயே நாட்டமிக்கவராக, அஃது எஞ்ஞான்று தமக்குக் கிட்டுமோ என்று கவலையுறுவாராயினர். 'மோக மாதிதரு பாச மானதை அறிந்து விட்டுனையும் எனையுமே முழுது ணர்ந்துயர மான இன்பவெள்ளம் மூழ்க வேண்டும்; இதுவின்றியே தேக மோநழுவி நானு மோநழுவின் பின்னை உய்யும்வகை உள்ளதோ?' என்பதிலும், இறப்பொடு பிறப்பை யுள்ளே எண்ணினால் நெஞ்சது பகீரெனும் துயலுறா(து) இருவிழியும், இரவு பகலாய்ச் செந்தழலின் மெழுகானது அங்கம்;இவை என்கொலோ’ என்பதிலும் இக்கவலை தட்டுப்படுதலைக் காணலாம். 7. சிரசகோத விலாசம் - 5 8. சின்மயானந்த குரு - 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/25&oldid=892252" இலிருந்து மீள்விக்கப்பட்டது