பக்கம்:தாயுமானவர்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசாரியனின் அருமை & 233 & என்ற கண்ணியில் வழுத்துகின்றார். இலிங்கம்பற்றிய பெருமை இறைவனைப் பற்றிய தலைப்பில் விளக்கியுள் ளோம். அடியார்கள் (சங்கமம்) பற்றிய செய்திகள் பிறிதோரி டத்தில் விளக்கப் பெற்றுள்ளன. குருவின் பெருமையை தமது 'மெளனகுரு வணக்கத்தில்" செவ்விதின் விளக்குகின்றார். இதன் முதற்பாடலில் 'மூலன் மரபில் வரும் மெளனகுருவே, நீ என்னை அறிவு மதங் கொண்ட யானையாக வளர்த்தனை. எவ்வாறெனில், ஆசை யாக விலங்கினைப் பொடிபடும்படி உதறி ஆங்கள்ரமாகிய முளையைப் பிடுங்கியெறிந்து இரண்டன்மை (அத்துவிதம்) விழைதல் என்னும் மதங்கொண்டு ஆறு சமயமும் ஆறுபோ லத் துதிக்கை பொழி நீராக அமைய, பாசமாகிய இருளைத் தன்னிழல் என்று கருதிச் சினந்து ஆரவாரஞ் செய்து, மேலே பார்த்த பெருமித நோக்குடன், பரந்து செல்லும் மனத்தைப் பெரியதோர் கவளமாக நிரம்பவுண்டு, முகத்திற் போர்த்த துணி போன்ற மாயையைக் கிழித்தெறிந்து அறிவாகிய ஒளி யோடு கூடிய உனது செவ்விய கையிற் பிடித்த சின்முத்திரை யாகிய தோட்டி வசமாய் அடக்கிப் பேரறிவானந்தப் பெரு வெள்ளத்தில் திளைத்து நின் திருவருளின் நிறைவாகிய நன் னிய வாசத்தில் உலவும் செய்தனை’’ என்று போற்றுகின்றார். மெளனகுருவின் உயர்நிலையை இதன் 7ஆம் பாடலில் மிக அழாககத் தெரிவிப்பார். 'குருநாயகனே, கண்ணால் காணும்போது கானகத்திலுள்ள புலி பசுவுடன் இணக்கமாய் உடன் திரியும்; மதங்கொண்ட யானை நீ கையினால் குறிப் புக் காட்டியவுடன் நெருப்பிலிடுவதற்குப் பெரிய கட்டை களை ஏந்திவரும். காமதேனுவாகிய விண்ணவர் பசு உன் பொன்னடியைத் தொழுது, உணவு ஆயத்தமாயிருக்கிற தென்று உங்கட்குத் தெரிவிக்கும். உலகிலுள்ள புரவலரும் 2. இந்நூல் - பக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/253&oldid=892256" இலிருந்து மீள்விக்கப்பட்டது