பக்கம்:தாயுமானவர்.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

哆,246 令 தாயுமானவர் கிட்டுகின்றது. இக்கோட்பாட்டை அடிகள் "இரவு பகல் இல் லாத பேரின்ப வீட்டினில் இசைந்து துயில் கொள்மின்” என்ற தொடரில் அடக்கி நமக்குக் காட்டுகின்றார். துயில் கொள்ளுதல் என்பது துங்குதல். துக்கத்தில் அனைத்தும் மறைந்துவிடுகின்றன." இத்தகைய துக்கத்தை நாடுவது முறையோ என்ற கேள்வி பிறக்கவும் இடம் உண்டு. இங்குத் துக்கம்' என்பது செயலற்ற நிலை"யைக் குறிப்பது. எங்கங்கெல்லாம் குறைபாடு உள்ளதோ அங்கங்கெல்லாம் செயல் நிகழ்கிறது. குறையை நிறைவு செய்யவே இயற்கை யில் ஒவ்வொரு செயலும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. ஆனால், பேரின்ப வீட்டில் குறைவு ஒன்றும் இல்லை. நிறைவு ஒன்றே ஆங்குத் திகழ்கின்றது. அமைதி ஆங்கு நிகழ்வதால் துயிலுறுதலோடு ஒப்பிட்டு அஃது இயம்பப் பெறுகின்றது. இந்த நிலையைத் தருபவன் ஆண்டவன். அவனை அடிகள் சித்தாந்த முத்தி முதல் என்கின்றார். அவரே திரிசிரபு ரத்தில் தட்சிணாமூர்த்தி வடிவில் திகழ்கின்றார். அவரே அடி கட்கு குருவாக வந்து இந்நிலையை அருளுவதால் அவரை அடிகள் பக்தியுடன் நினைந்து போற்றுகின்றார். சின்மையா னந்த குரு' என்ற தலைப்பிலுள்ள பத்துப் பாடல்களும் இந்நிலையையே சுட்டுகின்றன. ஆசாரியனின் பெருமை யையே போற்றுகின்றன. 11. அனைத்தையும் அறிந்த வண்ணம் துயில் கொள்ளுதல் - அறி துயில் கொள்ளுதல் - ஆண்டவன் ஒருவனுக்கே உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/266&oldid=892270" இலிருந்து மீள்விக்கப்பட்டது