உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தாயுமானவர்.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசாரியனின் அருமை ※ 245 令 டுவதே இல்லை. இக்கோட்பாடுகளையெல்லாம் சிந்தித்த அடிகள் அவற்றை நமனை விட்டு இடர்உற உறுக்கி இடர் தீர்த்து என்னும் பகுதியில் அடக்கிக் காட்டுகின்றார். இடரினின்று விலகிக் கொள்ளுதலுடன் வாழ்க்கை முடிந்து விடுகின்றதா? என்ற கேள்வி எழுகின்றது. பசி என்பது ஒருவித இடர். அதனினின்று விலகிக் கொள்ள உயிர்கள் முயலுகின்றன. அதற்காக உணவைத் தேடி அலை கின்றன. உணவு கிடைத்தவுடன் அதனை உண்பதால் பசி நீங்குகின்றது. பசி இருக்கும்வரை உணவை மனிதன் சுவைத்து உண்பதில்லை. பசி ருசி அறியாது’ என்பது பழ மொழி. பசி அடங்கினபடி உணவை உள்ளபடி சுவைக்கும் இயல்பு மனிதனுக்கும் உயிர்கட்கும் வந்துவிடுகின்றது. அறு சுவையோடு கூடிய உணவைச் சுவைத்து உண்பது மனித னுக்கென்று அமைந்துள்ள வாய்ப்பு. விதவிதமான உணவுப் பண்டங்களைத் தயாரிக்கும் மனிதனுடைய மூளை வியத்தற் குரியது. அவற்றைச் சுவைத்து உண்ணுங்கால் இன்பம் மேலி டுகிறது. அந்நிலையில் தீநெறியினின்று விலகி நன்னெறிக்கு வருகின்ற மனிதனுக்கு இரண்டுவித நிலைகள் அமைகின்றன. இடர் தீர்த்திருப்பது உடனே கிடைக்கும் வாய்ப்பு: இஃது பசிப் பிணியை அகற்றுதற்கு ஒப்பானது. இது முதல் நிலை. அடுத்த நிலை பேரின்பம் எய்துவது. இதுவே மனிதனது உண்மையான நிலை. அஃது அவனுக்கே உரிய இடமாத லால் அது வீடுபேறு என்று வழங்கி வருகிறது. அப்பேரின்ப வீடு பாருலகிலுள்ள வீடு போன்றதன்று. இவ்வீடு அழியும் தன்மையுடையது. எனவே, இது காலத்துக்கு உட்பட்டது. ஆகவே, இங்குப் பகல் உண்டு; இரவும் உண்டு. பேரின்ப வீடோ உலக வாழ்க்கைக்கு அப்பாற்பட்டது. காலம் நடை போடாதது. காலத்தின் ஆதிக்கம் அங்கு இல்லை. ஆதலால் அஃது இரவு பகல் அற்ற இடம். துன்பமாக மாறி அமையும் சிற்றின்பத்திற்கு இடம் இல்லை. ஒப்பற்ற பேரின்பமே ஆங்கு உள்ளது. நன்ன்ெறியில் செல்லுகின்ற ஆன்மசாதகன் ஒருவனுக்கு அத்தகைய பெரும் பேறு வீடு பேறு -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/265&oldid=892269" இலிருந்து மீள்விக்கப்பட்டது