பக்கம்:தாயுமானவர்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் & 265 & 'நன்னெஞ்சத்து அன்பர்எலாம் நாதரைச்சேர்ந்து இன்புஅணைந்தார் வன்னெஞ்சத் தாலேநான் வாழ்வு.இழந்தேன் பைங்கிளியே” - பைங்கிளி 32 என்ற பைங்களிக் கனணியில் தட்டுப்படுகின்றதைக் காண லாம். இதே பத்தில் வரும் 'பொழிகின்ற துன்பப் புயல்வெள் ளத்தினின் கழற்புணைகொணடு இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச் கழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய அழிகின்ற னன்உடை யாய்அடி யேன்!உன் அடைக்கலமே' (5) என்ற பாடலின் பிம்பம், 'பாடி, ஆடி,நின்று இரங்கிநின் பதமலர் முடிமேல் ஆடி வாழ்ந்தனர் அமலதின் அடியர்:யான் தொழும்பன் நாடி யேஇந்த உலகத்தை மெய்என நம்பித் தேடி னேன்வெறும் தீமையே, என்இனிச் செய்வேன்?" - எனக்கெனச்செயல் 18 என்ற அடிகளாரின் திருப்பாடலில் பிரதிபலிக்கின்றது. வாசகர் பெருமான் திருச்சதகத்தி வரும் "தனியனேன் பெரும்பிறவிப் பெளவத் தெவ்வத் தடந்திரையால் எற்றுண்டு பற்றொற்றின்றிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/285&oldid=892291" இலிருந்து மீள்விக்கப்பட்டது