பக்கம்:தாயுமானவர்.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ళ 274 • தாயுமானவர் ஊர்அனந் தம்;பெற்ற பேர்அனந் தம் சுற்றும் உறவு.அனந் தம்;வினையினால் உடல்அனந் தம்;செய்யும் வினை.அனந் தம்கருத் தோஅனந்தம் ...." - பரசிவ வணக்கம் 2 என்று தத்துவமாக்கி வெளியிடுவர். இங்ங்ணம் பல்வேறு ஒப்புமைப் பகுதிகளை ஒப்புணர்வுள்ள கருத்துகளை எடுத்துக் காட்டி அநுபவித்து மகிழலாம். (ஏ) பத்திரிகிரியார்: பட்டினத்தாரிடம் ஒட்டி உறவு கொண்டு வாழ்ந்தவர் இவர். 'என்னை அறிந்துகொண்டேன் எங்கோமா னேடுஇருக்கும் தன்மையறிந்து சமைந்திருப்பது எக்காலம்..." என்னும் பத்திரிகிரியாரின் பாடற் பாங்கு அடிகளாரின், 'தன்னை அறிந்தால் தலைவன்மேல் பற்றுஅலது பின்னைஒரு பற்றுஉண்டோ பேசாய் பராபரமே” -- பராபரம் 94 என்ற பராபரக் கண்ணியின் கருத்தாக வெளிவந்திருப்பதைக் காணலாம். இந்த இருவரையும் ஒன்று சேர்த்து தாயுமான அடிகள் 'ஒட்டுடன் பற்றுஇன்றி உலகைத் துறந்தசெல்வப் பட்டினத்தார் பத்திரகிரி பண்புஉணர்வது எந்நாளே” - எந்நாள். அடியார் வணக்.5 என்ற கண்ணியில் வழிபடும் பாங்கில் பாராட்டி மகிழ்கின்றார். (ஐ) இராமலிங்க சுவாமிகள்: சுத்தசிவ சமரச சன்மார்க்கத் தத்துவத்திற்கு ஒர் இயக்க வடிவு அளித்தவர் அருட்பிரகாச வள்ளலார் என்னும் இராமலிங்க சுவாமிகள். அவர்தம் கருத் துக்கு முன்னோடியாகத் திகழ்வன அடிகளாரின் திருப்பாடல் கள். வேதாந்தமாகிய கேவலாத்வைதத்திற்கும் புனிதாத்வை தத்திற்கும் இடையே அமைந்துள்ள சமரசப் பண்பை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/294&oldid=892301" இலிருந்து மீள்விக்கப்பட்டது