பக்கம்:தாயுமானவர்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிபாட்டு முறைகள் 令 279 哆 ளின் வரையிலும் நடை கம்பீரமானது! இராமலிங்கரின் பெரும்பாலான பாடல்கள் அனைத்தும் கம்பீரமான நடை யில் அமைந்திருப்பதைக் கண்டு மகிழலாம். இரண்டு பெரி யார்களின் பாடல்களைப் படித்து - பாடி - அநுபவித்தால் தான் இவ்வுண்மை தட்டுப்படும். இருவரும் பாடல்களி லேயே சொற்பெருக்காற்றுவதைக் கண்டு மகிழலாம். இரண்டு பெரியார்களின் பாடல்களிலும் உருவகங்கள் பொதிந்து நிற்பதையும் கண்டு தெளியலாம். (ஒ) பாரதியார்: தேசிய கவி பாரதியாரின் தேசிய கீதம் 'வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம்” என்ற முதற் பாடலுக்கு தாயுமானவர் ஆனந்தக் களிப்பு மெட்டு' என்றும் பதினான்காம் பாடலாய் அமைந்துள்ள, 'தாயின் மணிக்கொடி பார் - அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரி' என்ற பாடலுக்கு தாயுமானவர் ஆனந்தக் களிப்பு வர்ண மெட்டு' என்றும், தமிழ்த்தாய் வாழ்த்தாய் வருகின்ற, "ஆதிச்சிவன் பெற்றுவிட்டான் - என்னை ஆரியமைந்தன் அகத்தியன் என்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான் ’ என்ற பாடலுக்கு தாயுமானவர் ஆனந்தக் களிப்பு சந்தம்' என்றும் பாரதியாரே குறித்துள்ளமை அடிகளின் பாடலின் செல்வாக்கைப் புலப்படுத்துவதாய் அமைந்துள்ளது. அன்றியும், சுதந்திரப் போர் என்ற பாடலில் அமைந்து விளங்கும், 33. பா.பா. தே.கீ. தாயின் மணிக்கொடி பாரீர் (14ஆம் பாடல்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/299&oldid=892306" இலிருந்து மீள்விக்கப்பட்டது