பக்கம்:தாயுமானவர்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 280 & தாயுமானவர் 'எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரின் உள்வளர்ந்த வண்ண விளக்கிது மடியிற் திருவுளமே” என வரும் கண்ணிகள் அடிகளாரது பராபரக் கண்ணியின் பண்பையும் பாவின் பாங்கையும், 'நாடிழந்து மக்களையும் நல்லாளை யும்பிரிந்து வீடிழந்திங் குற்றேன் விதியினை சொல்கேனே என வரும் கண்ணிகள் அடிகளாரின் பைங்கிளிக் கண்ணியின் உணர்வையும் உயிர்ப்பையும் பெற்று விளங்குவதை அறிந்து மகிழலாம். இவ்வாறு வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபுபோல அடிகளின் சமய தத்துவ இலக்கியச் சுவட்டில் வடலூர் வள்ளல், அமரகவி பாரதியார் முதலியோர் பெய் கின்ற திறம் கண்டு மகிழலாம். மற்றும் 'முன்னோர் மொழிப் பொருளை பொன்னேபோல் போற்றும் மரபையும், காத்து வருதலையும் கண்டு களிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/300&oldid=892309" இலிருந்து மீள்விக்கப்பட்டது